IPL 2023: சின்னபுள்ள தனமா சறுக்கு விளையாட்டு விளையாடும் விராட் கோலி: வைரலாகும் புகைப்படம்!
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியின் ஃபன்னி விளையாட்டுகள் ஆரம்பமாகிவிட்டது.
பெங்களூரு எம் சின்னச்சாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி விராட் கோலியின் பொறுப்பான அரைசதத்தால் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது.
IPL 2023: யார் இந்த விஜயகுமார் வைஷாக்? ஆர்சிபியின் வெற்றிக்கு வித்திட்ட மீடியம் ஃபாஸ்ட் பவுலர்!
பின்னர், இந்த மைதானத்திற்கு எளிய ஸ்கோரான 175 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட டெல்லி கேபில்டஸ் அணி களமிறங்கியது. இதில், பிருத்வி ஷா ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட்டில் வெளியேறினார். புது மாப்பிள்ளை மிட்செல் மார்ஷ் டக் அவுட்டில் வெளியேற, அடுத்து வந்த யாஷ் துல் 1 ரன் என்று வரிசையாக ஒவ்வொருவராக ஆட்டமிழந்தனர். மணீஷ் பாண்டே மட்டும் பொறுப்பாக ஆடி 50 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெள்யேறினர்.
இறுதியாக டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இது டெல்லி கேபிடல்ஸ் அணியின் 5ஆவது தோல்வியாகும். டெல்லி அணி பேட்டிங் ஆடிய போது அந்த அணியின் வீரர் மிட்செல் மார்ஷ் மற்றும் அமன் கான் ஆகியோர் அடித்த பந்தை கேட்ச் பிடித்த விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்டார். இந்தப் போட்டிக்குப் பிறகு நாளை மீண்டும் பெங்களூருவில் முக்கியமான போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், விராட் கோலி குழந்தைகள் போன்று சறுக்கு விளையாடு விளையாடும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மனசு இன்னும் இளமையாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
IPL 2023: ஓவரா ஆட்டம் போட்ட விராட் கோலிக்கு கை கொடுக்காமல் சென்ற சவுரவ் கங்குலி; வைரலாகும் வீடியோ!