கூல்டிரிங்ஸ் கொண்டு வந்து கொடுத்து ரோகித் சர்மாவுக்கு டிப்ஸ் கொடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின்!

தன்னை அணியில் எடுக்காததைக் கூட பொருட்படுத்தாத ரவிச்சந்திரன் அஸ்வின் சக வீரர்களுக்கு கூல்டிரிங்க்ஸ் கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

Ravichandran Ashwin was carrying drinks during the break and gives some tips to Indian skipper Rohit Sharma against Australia in WTC Final

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா முதலில் ஆடி வருகிறது. இதில், 11 பேர் கொண்ட இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெறவில்லை. அது ஏன் என்பதற்கான காரணம் குறித்து ரோகித் சர்மா விளக்கம் கொடுத்துள்ளார்.

அவுட் ஆவுடா: ரசிகர்களால் கூட தாங்க முடியவில்லை! வைரலாகும் போஸ்டர்: ஆஸி, 200 ரன்கள் பார்ட்னர்ஷிப்!

வானிலை மேகமூட்டத்துடன் இருப்பதான் காரணமாக 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க உள்ளோம். இந்த ஓவல் மைதானம் பேட்டிங்கிற்கு சாதமானதாக உள்ளது. ஆதலால், சுழற்பந்து வீசுவதுடன் சிறப்பாக பேட்டிங் ஆடக் கூடிய ரவீந்திர ஜடேஜாவை அணியில் தேர்வு செய்தோம்.

முதல் 2 ஓவர்களை மனதில் கொண்டுதான் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம் பெற்றனர். ஆனால், நாங்கள் 5 நாட்களையும் எடுத்துக் கொள்ளவில்லை. அஸ்வின் சிறந்த மேட்ச் வின்னராக எங்களுக்கு இருந்தார். ஓவல் மைதானத்தில் மேகம் களைந்து வெயில் வந்துள்ளது.

ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிற்கு 6 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அஸ்வின் சிறந்த பந்து வீச்சாளராக இருந்துள்ளார். முக்கியமான போட்டியான இந்த சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அஸ்வினை உட்கார வைத்தது ஒவ்வொருவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், தன்னை அணியில் எடுக்காததைக் கூட பொருட்படுத்தாத ரவிச்சந்திரன் அஸ்வின், சக வீரர்களுக்கு கூல்டிரிங்ஸ் கொண்டு வந்து கொடுத்து ரோகித் சர்மாவுக்கு சில டிப்ஸ்களையும் வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரவிச்சந்திரன் அஸ்வினை கழற்றிவிட்ட டீம் இந்தியா: என்ன காரணம் தெரியுமா?

அஸ்வினைப் பொறுத்தவரையில், 2021 - 2023ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 61 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இங்கிலாந்தில் நடந்த கடைசி 6 டெஸ்ட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் 11 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெறவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கண்டத்திலிருந்து தப்பித்து வரும் ரோகித் சர்மா: வைரலாகும் படிக்கட்டில் கால் தடுமாறி கீழே விழ தெரிந்த வீடியோ!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios