கண்டத்திலிருந்து தப்பித்து வரும் ரோகித் சர்மா: வைரலாகும் படிக்கட்டில் கால் தடுமாறி கீழே விழ தெரிந்த வீடியோ!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது ரோகித் சர்மா படிக்கட்டில் இறங்கி வந்த போது கால் தடுமாறி கீழே விழ தெரிந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Rohit Sharma missed the Steps and be safe after that in WTC Final, Oval

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணியில் உஸ்மான் கவாஜா ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதையடுத்து டேவிட் வார்னர் 43 ரன்களில் வெளியேறினார்.

4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனைகள்!

நிதானமாக ஆடி வந்த லபுஷேன் உணவு இடைவேளைக்குப் பிறகு முகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து டிரேவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவென் ஸ்மித் இருவரும் ஆடி வருகின்றனர். தற்போது வரையில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இந்த நிலையில் டாஸ் போட வந்த ரோகித் சர்மா படிக்கட்டில் இறங்கி வரும் போது கால் தடுமாறி கீழே விழ தெரிந்துள்ளார். அதன் பிறகு பாதுகாப்பாக இறங்கி சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கையில் மொபைல் உடன் செல்ஃபி எடுக்க விராட் கோலியை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள்!

இந்திய அணி வீரர்கள்:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சட்டேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்கியா ரஹானே, கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.

ஆஸ்திரேலியா வீரர்கள்:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவென் ஸ்மித், டிராவிட் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயான், ஸ்காட் போலந்து

Lunch Break Report: அதிரடி காட்டிய வார்னர்: ஆஸ்திரேலியா 73 ரன்கள் குவிப்பு!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios