கையில் மொபைல் உடன் செல்ஃபி எடுக்க விராட் கோலியை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள்!

விராட் கோலியுடன் செல்ஃபி எடுப்பதற்கு ரசிகர்கள் கையில் மொபைல் உடன் அவரை சுற்றி வளைத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Fans Surrounding Virat Kohli to Take Selfie with him in WTC Final at Oval

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா முதலில் ஆடி வருகிறது. இதில், தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா ரன் ஏதும் எடுக்காமல் சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து மார்னஸ் லபுஷேன் களமிறங்கினார்.

Lunch Break Report: அதிரடி காட்டிய வார்னர்: ஆஸ்திரேலியா 73 ரன்கள் குவிப்பு!

இந்திய அணி வீரர்கள்:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சட்டேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்கியா ரஹானே, கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.

ஆஸ்திரேலியா வீரர்கள்:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவென் ஸ்மித், டிராவிட் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயான், ஸ்காட் போலந்து.

லபுஷேன் கையை பதம் பார்த்த சிராஜ்: பேட்டை உதறிவிட்ட நடந்து சென்ற லபுஷேன்!

டேவிட் வார்னர் மற்றும் லபுஷேன் இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்து வருகினர். இதில், வார்னர் 60 பந்துகளில் 8 பவுண்டரி உள்பட 43 ரன்கள் சேர்த்து ஷர்துல் தாக்கூர் ஓவரில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் டைவ் அடித்து கேட்ச் பிடித்து வார்னரின் விக்கெட்டை கைப்பற்றினார். இவரைத் தொடர்ந்து ஸ்டீவென் ஸ்மித் களமிறங்கி விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் டாஸ் போட்ட பிறகு இரு அணி வீரர்களும் மைதானத்திற்கு வரும் போது கையில் மொபைல் வைத்துக் கொண்டு விராட் கோலியுடன் செல்ஃபி எடுக்க ரசிகர்கள் அவரை சூழந்து கொண்டனர். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒடிசா ரயில் விபத்து: ஒரு நிமிடம் இரங்கல் தெரிவித்து, கறுப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்!

 

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios