ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிற்கு 6 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கம்!

தென் கொரியாவின் யெச்சியோனில் நடந்த ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா மொத்தமாக 19 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

India won 6 Gold, 7 Silver and 6 Bronze medals in 20th Asian U20 Athletics Championships 2023, Yecheone

தென் கொரியாவில் உள்ள யெச்சியோன் பகுதியில் ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 4ஆம் தேதி முதல் இன்று வரையில் நடந்தது. இதில், இந்திய இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர். இதில், பெண்களுக்கான 400 மீட்டர் போட்டியில் 53.31 வினாடிகளில் ஓடி இந்தியாவின் ஹீனா மல்லிக் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். இதே போன்று ஆண்களுக்கான வட்டி எறிதல் போட்டியில் பாரத்ப்ரீத் சிங் 55.66 மீ எறிந்து இந்தியாவிற்கு 2ஆவது தங்கம் வென்றார்.

ரவிச்சந்திரன் அஸ்வினை கழற்றிவிட்ட டீம் இந்தியா: என்ன காரணம் தெரியுமா?

பெண்களுக்கான 5000 மீ தடகளப் இந்தியாவின் அந்திமா பால் வெண்கலம் வென்றுள்ளார். இந்தப் போட்டியில் இந்தியா பெற்ற முதல் பதக்கம் இதுவாகும். அவர் 17:17.11 வினாடிகளில் கடந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார். புஷ்ரா கான் கௌரி 18:15.98 வினாடிகளில் கடந்து 5ஆவது இடன் பிடித்துள்ளார். இந்தப் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி வென்ற யோனேசவா நானகா மற்றும் மட்சுமோட்டோ அகாரி ஆகியோர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்டத்திலிருந்து தப்பித்து வரும் ரோகித் சர்மா: வைரலாகும் படிக்கட்டில் கால் தடுமாறி கீழே விழ தெரிந்த வீடியோ!

நேற்று நடந்த டெகாத்லான் பிரிவில் இந்திய வீரர் சுனில் குமார் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இதே போன்று பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் இந்தியாவின் தமன்னா, அக்‌ஷயா, நயனா, அபினய் ஆகியோர் வெண்கலம் வென்றுள்ளனர். மற்றொரு போட்டியில் 3000 மீட்டர் ஓட்டப்போட்டியில் இந்தியாவின் புஷ்ரா கான் வெள்ளி வென்றுள்ளார்.

இந்த நிலையில், இன்று நடந்த பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் இந்திய வீராங்கனை சோனா சாண்டிலா தங்கம் வென்றார். இதே போன்று ஆண்கள் பிரிவில் 1500 மீட்டர் போட்டியில் ஹசன் வெண்கலம் வென்றுள்ளார். இதே போன்று 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.

4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனைகள்!

ஆசிய அண்டர்20 தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 6 தங்கம், 7 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என்று மொத்தமாக 19 பதக்கங்கள் வென்றுள்ளது. ஜப்பான் 14 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என்று மொத்தமாக 23 பதக்கங்கள் கைப்பற்றி முதலிடம் பிடித்துள்ளது.  சீனா 11 தங்கம், 5 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கத்துடன் 2ஆவது இடம் பிடித்துள்ளது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios