Asianet News TamilAsianet News Tamil

ரவிச்சந்திரன் அஸ்வினை கழற்றிவிட்ட டீம் இந்தியா: என்ன காரணம் தெரியுமா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 11 பேர் கொண்ட இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெறவில்லை.

Team India dropped Ravichandran Ashwin against Australia in WTC Final, Do you know the reason?
Author
First Published Jun 7, 2023, 8:28 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா முதலில் ஆடி வருகிறது. இதில், 11 பேர் கொண்ட இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெறவில்லை. அது ஏன் என்பதற்கான காரணம் குறித்து ரோகித் சர்மா விளக்கம் கொடுத்துள்ளார்.

கண்டத்திலிருந்து தப்பித்து வரும் ரோகித் சர்மா: வைரலாகும் படிக்கட்டில் கால் தடுமாறி கீழே விழ தெரிந்த வீடியோ!

வானிலை மேகமூட்டத்துடன் இருப்பதான் காரணமாக 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க உள்ளோம். இந்த ஓவல் மைதானம் பேட்டிங்கிற்கு சாதமானதாக உள்ளது. ஆதலால், சுழற்பந்து வீசுவதுடன் சிறப்பாக பேட்டிங் ஆடக் கூடிய ரவீந்திர ஜடேஜாவை அணியில் தேர்வு செய்தோம்.

4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனைகள்!

முதல் 2 ஓவர்களை மனதில் கொண்டுதான் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம் பெற்றனர். ஆனால், நாங்கள் 5 நாட்களையும் எடுத்துக் கொள்ளவில்லை. அஸ்வின் சிறந்த மேட்ச் வின்னராக எங்களுக்கு இருந்தார். ஓவல் மைதானத்தில் மேகம் களைந்து வெயில் வந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அஸ்வின் சிறந்த பந்து வீச்சாளராக இருந்துள்ளார். முக்கியமான போட்டியான இந்தப் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அஸ்வினை உட்கார வைத்தது ஒவ்வொருவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கையில் மொபைல் உடன் செல்ஃபி எடுக்க விராட் கோலியை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள்!

அஸ்வினைப் பொறுத்தவரையில், 2021 - 2023ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 61 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இங்கிலாந்தில் நடந்த கடைசி 6 டெஸ்ட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் 11 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெறவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Lunch Break Report: அதிரடி காட்டிய வார்னர்: ஆஸ்திரேலியா 73 ரன்கள் குவிப்பு!

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios