அவுட் ஆவுடா: ரசிகர்களால் கூட தாங்க முடியவில்லை! வைரலாகும் போஸ்டர்: ஆஸி, 200 ரன்கள் பார்ட்னர்ஷிப்!

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா வீரர்கள் 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்து விக்கெட் கொடுக்காமல் விளையாடி வருகின்றனர்.

India Fans Asking Wickets against Australia in World Test Championship Final 2023 at Oval

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. இதில், உஸ்மான் கவாஜா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். டேவிட் வார்னர் 43 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த லபுஷேனும் 23 ரன்களில் வெளியேற ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது.

ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிற்கு 6 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கம்!

அதன்பிறகு ஸ்டீவென் ஸ்மித் மற்றும் டிரேவிஸ் ஹெட் இருவரும் ஜோடி சேர்ந்து ரன்கள் குவித்தனர். இதில், டிரேவிஸ் ஹெட் 115 ரன்கள் குவித்து விளையாடி வருகிறார். இதே போன்று ஸ்டீவ் ஸ்மித்தும் 75 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

இந்த நிலையில், ஹெட் மற்றும் ஸ்மித் இருவரும் 200 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் கொடுத்து விளையாடி வருகின்றனர். இதனால், இந்திய வீரர்கள் விக்கெட் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்திய வீரர்கள் மட்டுமல்ல போட்டியை பார்த்து வரும் ரசிகர்களால் கூட பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவுட் ஆவுடா என்றும், விக்கெட் பிளீஸ் என்றும் ரசிகர்கள் போஸ்டரை வெளியிட்டு வருகின்றனர். இந்தப் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரவிச்சந்திரன் அஸ்வினை கழற்றிவிட்ட டீம் இந்தியா: என்ன காரணம் தெரியுமா?

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்து பேட்டிங் ஆடுவதற்கு பதிலாக பவுலிங் தேர்வு செய்து மோசமான முடிவு எடுத்துள்ளார் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஓவல் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம் என்பதால், முதலில் பேட்டிங் எடுத்திருக்க வேண்டும். இதே போன்று உலக சிறந்த டெஸ்ட் பவுலரான ரவிச்சந்திரன் அஸ்வினை அணியில் எடுக்காதது இந்திய அணிக்கு இழப்பாக அமைந்துள்ளது.

கண்டத்திலிருந்து தப்பித்து வரும் ரோகித் சர்மா: வைரலாகும் படிக்கட்டில் கால் தடுமாறி கீழே விழ தெரிந்த வீடியோ!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios