இந்திய அணிக்கு கேஎல் ராகுல் தான் சரியான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் – ரவிச்சந்திரன் அஸ்வின்!
தோனி மற்றும் யுவராஜ் சிங் இடத்தை கேஎல் ராகுல் நிரப்பிவிட்டதாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
இந்திய அணியில் தோனி 4 ஆவது அல்லது அதற்கும் கீழ் வரிசையில் இறங்கி விளையாடி ரன்கள் சேர்த்தார். இதே போன்று தான் இடது கை பேட்ஸ்மேனான யுவராஜ் சிங்கும். இந்திய அணியில் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும் கூட, மிடில் ஆர்டரில் உள்ள தோனி மற்றும் யுவராஜ் சிங் இருவரும் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
பயிற்சி போட்டியில் 199 ரன்கள் குவித்து பீல்டிங்கும் செய்த ஷ்ரேயாஸ் ஐயர்!
இருவரும் இணைந்து 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றனர். யுவராஜ் சிங் மற்றும் தோனிக்குப் பிறகு இந்திய அணிக்கு நம்பிக்கையான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அமையவில்லை. இந்த நிலையில் தான் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியின் மிடில் ஆர்டர் குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: யுவராஜ் சிங் மற்றும் தோனியின் ஓய்வுக்கு பிறகு இந்திய அணிக்கு கிடைத்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் அவர்களது இடத்தை சரியாக நிரப்பிவிட்டார்.
இந்திய அணியின் நம்பர் 5 பேட்ஸ்மேன் கேஎல் ராகுல். ரிஷப் பண்ட் காயத்திற்கு முன், கேஎல் ராகுல் தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேக்கப் வீரராக இருந்தார். ஆனால், இப்போது ரிஷப் பண்ட் இல்லாத நிலையில், கேஎல் ராகுல் நேரடியாக விக்கெட் கீப்பிங் பணியை செய்ய உள்ளார். கேஎல் ராகுல் அணியில் இடம் பெறவில்லை என்றால், சஞ்சு சாம்சன் அணியில் இருக்கிறார். அவரும் இல்லையென்றால் இஷான் கிஷான் அணியில் இடம் பெற்றிருக்கிறார்.
இந்தியாவில் நடக்கும் போட்டிகளுக்கு டைட்டில் ஸ்பான்சர் ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க்: பிபிசிஐ அறிவிப்பு
தற்போது ஆசியக் கோப்பைக்கு முன்னதாக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வரும் இந்திய வீரர்கள் யோ யோ டெஸ்ட் எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த பரிசோதனையில் கேஎல் ராகும் மட்டுமே பங்கேற்கவில்லை. ஏனென்றால், அறுவை சிகிச்சைக்குப் பிறகு இத்தனை நாட்களாக கேஎல் ராகுல் அகாடமியில் தான் பயிற்சி மேற்கொண்டு வந்து, தனது உடல் தகுதியை நிரூபித்த நிலையில் தான் அணிக்கு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.