இந்தியாவில் நடக்கும் போட்டிகளுக்கு டைட்டில் ஸ்பான்சர் ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க்: பிபிசிஐ அறிவிப்பு

பிசிசிஐ இந்தியாவில் நடத்தும் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான டைட்டில் ஸ்பான்சர் உரிமையை ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி பெற்றுள்ளது.

IDFC First acquires title sponsorship rights for all BCCI international and domestic home matches

பிசிசிஐ இந்தியாவில் நடத்தும் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான டைட்டில் ஸ்பான்சர் உரிமையை ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி (IDFC First) பெற்றுள்ளது.

பிசிசிஐ நிகழ்வுகளுக்கான டைட்டில் ஸ்பான்சர் உரிமை ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்று பிபிசிஐ அறிவித்துள்ளது. இந்த உரிமையைப் பெற்றதன் மூலம், பிசிசிஐ நடத்தும் அனைத்து சர்வதேச போட்டிகளுக்கும் (பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரும்), இரானி டிராபி, துலீப் டிராபி மற்றும் ரஞ்சி டிராபி போன்ற உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கும் ஐடிஎப்சி வங்கி டைட்டில் ஸ்பான்சராக இருக்கும்.

இதேபோல, இந்தியாவில் நடக்கவிருக்கும் அனைத்து ஜூனியர் கிரிக்கெட்டுகளுக்கும் (19 வயதுக்குட்பட்டோர் மற்றும் 23 வயதுக்குட்பட்டோர்) ஸ்பான்சராக இருக்கப்போவது ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி தான்.

இன்போசிஸ் விளம்பரத் தூதராக டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடால் ஒப்பந்தம்!

IDFC First acquires title sponsorship rights for all BCCI international and domestic home matches

இந்த ஸ்பான்சர்ஷிப் மற்றும் டைட்டில் ஸ்பான்சர் உரிமை காலம் அடுத்த மாதம் தொடங்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருடன் தொடங்கும் என்றும் ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் மற்றும் பி.சி.சி.ஐ. இணைந்து கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு இணையற்ற அனுபவங்களை உருவாக்க முயற்சி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் ரோஜர் பின்னி கூறுகையில், “ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் எங்கள் வீட்டில் நடக்கும் அனைத்து போட்டிகளுக்கும் டைட்டில் ஸ்பான்சராக இருப்பதை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பார்வை கிரிக்கெட்டின் உணர்வோடு எதிரொலிக்கிறது, மேலும் விளையாட்டு மற்றும் அதன் அர்ப்பணிப்புள்ள ரசிகர்களுக்கு பயனளிக்கும் வெற்றிகரமான ஒத்துழைப்பை நாங்கள் எதிர்நோக்குகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

"இந்திய கிரிக்கெட்டில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. பிசிசிஐ இந்தியாவில் நடத்தும் மேட்ச்களுக்கு டைட்டில் ஸ்பான்சராக ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் இருக்கும்." என பிசிசிஐயின் கெளரவச் செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.

“ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் நிறுவனத்தை பிசிசிஐ வரவேற்கிறது. பிசிசிஐ இந்தியாவுக்குள் நடத்தும் சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளுக்கு டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். கிரிக்கெட் வெறும் விளையாட்டு மட்டுமல்ல; நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களை ஒன்றிணைக்கும் நிகழ்வு" என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ விஞ்ஞானி ஆவது தான் லட்சியமா? 10ஆம் வகுப்பில் இருந்தே திட்டமிட்டால் வெற்றி நிச்சயம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios