ஜடேஜா பெருந்தன்மையான மனசுக்காரர்.. அவரோட பவுலிங் கோட்டாவை விட்டுக்கொடுத்தார்..! அஷ்வின் புகழாரம்
ஜடேஜா பெருந்தன்மையானவர் என்று ரவிச்சந்திரன் அஷ்வின் புகழ்ந்து பேசியுள்ளார்.
இந்தியா வெற்றி:
இந்தியா - இலங்கை இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி மொஹாலியில் நடந்தது. அந்த போட்டியில் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும், இலங்கை அணி மீது முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி அபாரமாக விளையாடிய இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஜடேஜா அபாரம்:
குறிப்பாக அந்த போட்டியில் ஜடேஜா அபாரமாக விளையாடினார். பேட்டிங்கில் 175 ரன்களை குவித்த ஜடேஜா, பவுலிங்கில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் மற்றும் 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட் என மொத்தம் 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அணியின் சீனியர் ஸ்பின்னரான அஷ்வின் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் மற்றும் 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட் என மொத்தம் 6 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.
இதையும் படிங்க - கடைசிவரை ஷேன் வார்னிடம் நான் இதை சொல்லலயே.. இப்ப சொல்லணும்னு நெனக்கிறேன்; அவர் இல்லையே! கலங்கிய பாண்டிங்
அஷ்வின் - ஜடேஜா ஜோடி அசத்தல்:
அஷ்வின் - ஜடேஜா ஆகிய 2 சீனியர் ஸ்பின்னர்கள் ஸ்பின்னிற்கு ஒத்துழைப்பு கொடுத்த மொஹாலி ஆடுகளத்தில் அனுபவத்தை பயன்படுத்தி அட்டகாசம் செய்ய, 3வது ஸ்பின்னரான ஜெயந்த் யாதவ் பவுலிங், பேட்டிங் என இரண்டிலுமே சோபிக்கவில்லை.
ஜெயந்த் யாதவ் பரிதாபம்:
பேட்டிங் ஆட கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளாமல் வெறும் 2 ரன் மட்டுமே அடித்தார். பவுலிங்கில் அவருக்கு பெரிதாக பந்துவீச வாய்ப்பே கிடைக்கவில்லை. அஷ்வின் மற்றும் ஜடேஜா அபாரமாக பந்துவீசியதால், 3வது ஸ்பின்னரான ஜெயந்த் யாதவுக்கு பெரிதாக பந்துவீச வாய்ப்பே கிடைக்கவில்லை. முதல் இன்னிங்ஸில் வெறும் 6 ஓவர்கள் மட்டுமே வீசினார். 2வது இன்னிங்ஸில் ஜடேஜா அவரது பவுலிங் கோட்டாவை விட்டுக்கொடுத்ததால் 11 ஓவர்கள் வீசினார்.
இதையும் படிங்க - என் வாழ்வில் நான் பார்த்த சிறந்த ஆஃப் ஸ்பின் ஸ்பெல் அதுதான்!ஆஸி.,க்கு எதிரான அஷ்வின் ஸ்பெல்லை புகழ்ந்த கம்பீர்
ஜடேஜா அவரது பவுலிங் கோட்டாவிலிருந்து சில ஓவர்களை ஜெயந்த் யாதவுக்கு விட்டுக்கொடுத்ததை வெகுவாக புகழ்ந்துள்ளார் அஷ்வின்.
அஷ்வின் புகழாரம்:
இதுகுறித்து பேசிய அஷ்வின், 3வது ஸ்பின்னராக ஆடுபவருக்கு சில நேரங்களில் போதுமான ஸ்பெல் கிடைக்காது. அது மிகவும் கடினமானது. ஜெயந்த் யாதவுக்கு போதுமான ஓவர்கள் கிடைக்கவில்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம். கேப்டன் ரோஹித்தும் அவருக்கு சில ஓவர்கள் வழங்க நினைத்தார். நன்றாக பந்து திரும்பிய ஒருமுனையை ஜடேஜா ஜெயந்த் யாதவுக்காக விட்டுக்கொடுத்தார். ஜடேஜா அவரது ஓவர்கள் சிலவற்றை ஜெயந்த் யாதவ் வீசட்டும் என்று விட்டுக்கொடுத்தார். ஜடேஜா பெருந்தன்மையுடன் அவரது ஓவர்களை ஜெயந்த் யாதவுக்கு வழங்கினார் என்று அஷ்வின் ஜடேஜாவை புகழ்ந்து பேசினார்.