அஸ்வினுக்கு 5ஆவது இடமா? ஒரே ஓவரில் 2 சிக்ஸர், ஜெய்ப்பூரில் அனல் பறக்க வைத்த தமிழக வீரர்!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 9ஆவது லீக் போட்டியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரே ஓவரில் 2ஆவது சிக்சர் அடித்து டி20 உலகக் கோப்பை ரேஸில் நானும் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லியுள்ளார்.

Ravichandran Ashwin come to 5th place and hit 3 sixes against delhi capitals in 9th IPL Match 2024 at jaipur rsk

ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 9ஆவது லீக் போட்டி நேற்று நடந்தது. இதில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரியான் பராக் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் ஆகியோர் தங்களது விக்கெட்டுகளை இழந்த தடுமாறினர்.

ஐபிஎல் நியூ டிரெண்ட் – ஒரு நிமிஷத்துல ஷாக் கொடுத்த ஸ்டப்ஸ் – போராடி தோற்ற டெல்லி கேபிடல்ஸ்!

 

 

 

இதில், ரவிச்சந்திரன் அஸ்வின் 5ஆவதாக களமிறங்கி குல்தீப் யாதவ் ஓவரில் ஒரு சிக்சர் விளாசினார். அதன் பிறகு ஆண்ட்ரிச் நோர்ட்ஜே ஓவரில் அதிரடியாக 2 சிக்ஸர்கள் விளாசினார். இதன் மூலமாக தானும் டி20 உலகக் கோப்பைக்கான ரேஸில் இருப்பதாக சொல்லாமல் சொல்லியுள்ளார். இந்தப் போட்டியில் ரியான் பராக் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது.

டெல்லி அணிக்காக 100ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடும் ரிஷப் பண்ட்!

 

 

பின்னர், 186 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு டெல்லி கேபிடல்ஸ் பேட்டிங் செய்தது. டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் இணைந்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். மார்ஷ் 23 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பூய் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய வார்னர் 49 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அதன் பிறகு வந்த கேப்டன் ரிஷப் பண்ட் 28 ரன்களில் வெளியேற, டெல்லி கேபிடல்ஸ் 13.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்திருந்தது.

SRH vs MI, IPL 2024: ஒன்னா, ரெண்டா, ஒவ்வொரு அடியும் இடி மாதிரில விழுந்துச்சு - SRH படைத்த சாதனைகளின் பட்டியல்!

அதன் பிறகு டெல்லி வெற்றிக்கு 41 பந்துகளில் 80 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், களத்தில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அபிஷேக் போரெல் இருந்தனர். இதில், போரெல் 9 ரன்களில் ஆட்டமிழக்க ஸ்டப்ஸ் உடன் அக்‌ஷர் படேல் இணைந்தார். ஆனால், படேல் பெரிதாக ஒன்றும் அடிக்கவில்லை என்றாலும் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாட டெல்லி வெற்றியை நோக்கி சென்றது. எனினும், கடைசி ஓவரில் டெல்லி வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை ஆவேஷ் கான் சிறப்பாக வீசி 5 ரன்கள் மட்டுமே கொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன் மூலமாக டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கல்ள் மட்டுமே எடுத்து 12 ரன்களில் தோல்வியை தழுவியது.

ஒரே ஓவரில் டர்னிங் பாய்ண்டான போட்டி – மைதானத்தையே அலற வைத்த ரியான் பராக்கின் வான வேடிக்கை ஷாட்!

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த சீசனில் விளையாடிய 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், இந்த சீசனில் புதிதாக ஹோம் மைதானம் ஒவ்வொரு அணிக்கும் ஒர்க் அவுட்டாகி வருகிறது. அதன்படி ஜெய்ப்பூரில் நடந்த இந்தப் போட்டி ராஜஸ்தானுக்கு நன்றாகவே கை கொடுத்துள்ளது. இந்தப் போட்டி உள்பட இதுவரையில் நடந்த 9 போட்டிகளில் அந்தந்த ஹோம் அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது.

ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடியிருந்தாலும், பந்து வீச்சில் 3 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 30 ரன்கள் கொடுத்துள்ளார். நந்த்ரே பர்கர், யுஸ்வேந்திர சாகல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஆவேஷ் கான் ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

சிக்ஸர் அடிச்சு ஆரம்பிச்சு வச்ச அஸ்வின் – 4, 4, 6, 4, 6 என்று முடித்த ரியான் பராக் – 185 ரன்கள் குவித்த RR!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios