SRH vs MI, IPL 2024: ஒன்னா, ரெண்டா, ஒவ்வொரு அடியும் இடி மாதிரில விழுந்துச்சு - SRH படைத்த சாதனைகளின் பட்டியல்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 8ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சமாக 277 ரன்கள் குவித்த முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

Historic records created during SRH vs MI 8th match in IPL 2024 at Hyderabad, Check Most Runs, Most Sixes, Fastest Fifty, most Expensive and check all Details Here rsk

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 8ஆவது லீக் போட்டி ஹைதராபாத்தில் நேற்று நடந்தது. இதில், முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை படைத்தது.

இதைத் தொடர்ந்து 278 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்து 20 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதைத் தொடர்ந்து இந்தப் போட்டியில் ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள், டி20ல் அதிக ரன்கள், அதிக சிக்சர்கள், அதிவேக அரைசதம் என்று ஏராளமான சாதனைகள் படைக்கப்பட்டன.

SRH vs MI போட்டியின் போது படைக்கப்பட்ட வரலாற்று சாதனைகள்:

  1. ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்கள் - 277/3, 20 ஓவர்கள்
  2. டி20 கிரிக்கெட் வரலாற்றில் 3ஆவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். டி20 கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 314/3, (20 ஓவர்கள்) Nepal vs Mongolia. 2ஆவது அதிகபட்ச ஸ்கோர் 278/3 Afghanistan vs Ireland.
  3. ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எடுத்த அதிகபட்ச ஸ்கோர்.
  4. ஐபிஎல் போட்டியில் அதிகபட்சமாக இந்த போட்டியில் மட்டுமே 38 சிக்சர்கள் அடிக்கப்பட்டிள்ளது.
  5. டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் 38.
  6. ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் இரு அணிகளும் எடுத்த ரன்கள் – 523.
  7. டி20 போட்டியில் இரு அணிகளும் எடுத்த அதிக ரன்கள் – 523
  8. அதிக சிக்ஸர்கள் அடித்த அணிகளின் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் இணைந்துள்ளது. இந்தப் போட்டியில் 20 சிக்ஸர்கள் அடித்துள்ளது.
  9. ஐபிஎல் போட்டியில் 3ஆவதாக அதிக சிக்ஸர்கள் அடித்த அணியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (18 சிக்சர்கள்) திகழ்கிறது.
  10. ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேகமாக 250 ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் படைத்துள்ளது.
  11. ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 (14.4 ஓவர்கள்) ரன்கள் அடித்த 2ஆவது அணி என்ற சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் படைத்துள்ளது.
  12. 10 ஓவர்கள் முடிவில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் (148 ரன்கள்) சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் படைத்துள்ளது.
  13. ஐபிஎல்லில் அறிமுக போட்டியில் அதிக ரன்கள் குவித்த பவுலர் என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணியின் குவெனா மபகா (0/66) படைத்துள்ளார்.
  14. அதிக ரன்கள் கொடுத்த மும்பை இந்தியன்ஸ் வீரர் என்ற சாதனையை குவெனா மபகா படைத்துள்ளார்.
  15. ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் கொடுத்த 3ஆவது பவுலர் என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணியின் குவெனா மபகா படைத்துள்ளார்.
  16. ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா (16 பந்துகள், 50 ரன்கள்) படைத்துள்ளார்.
  17. அதிவேகமாக 2ஆவது அரைசைதம் அடித்த வீரர் டிராவிஸ் ஹெட் (18 பந்துகள், 52 ரன்கள்)
  18. ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் அடித்த 4ஆவது வீரர் – அபிஷேக் சர்மா (16 பந்துகள்)
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios