ஐபிஎல் நியூ டிரெண்ட் – ஒரு நிமிஷத்துல ஷாக் கொடுத்த ஸ்டப்ஸ் – போராடி தோற்ற டெல்லி கேபிடல்ஸ்!
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 9ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் ஹோம் டிரெண்டில் இடம் பெற்று வருகிறது.
ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 9ஆவது லீக் போட்டி நடந்தது. இதில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரியான் பராக் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். ரியான் பராக் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது.
டெல்லி அணிக்காக 100ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடும் ரிஷப் பண்ட்!
பின்னர், 186 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு டெல்லி கேபிடல்ஸ் பேட்டிங் செய்தது. டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் இணைந்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். மார்ஷ் 23 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பூய் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய வார்னர் 49 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அதன் பிறகு வந்த கேப்டன் ரிஷப் பண்ட் 28 ரன்களில் வெளியேற, டெல்லி கேபிடல்ஸ் 13.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்திருந்தது.
அதன் பிறகு டெல்லி வெற்றிக்கு 41 பந்துகளில் 80 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், களத்தில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அபிஷேக் போரெல் இருந்தனர். இதில், போரெல் 9 ரன்களில் ஆட்டமிழக்க ஸ்டப்ஸ் உடன் அக்ஷர் படேல் இணைந்தார். ஆனால், படேல் பெரிதாக ஒன்றும் அடிக்கவில்லை. மறுபுறம் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாட டெல்லி வெற்றியை நோக்கி சென்றது. எனினும், கடைசி ஓவரில் டெல்லி வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை ஆவேஷ் கான் சிறப்பாக வீசி 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதன் மூலமாக டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கல்ள் மட்டுமே எடுத்து 12 ரன்களில் தோல்வியை தழுவியது.
ஒரே ஓவரில் டர்னிங் பாய்ண்டான போட்டி – மைதானத்தையே அலற வைத்த ரியான் பராக்கின் வான வேடிக்கை ஷாட்!
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த சீசனில் விளையாடிய 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், இந்த சீசனில் புதிதாக ஹோம் மைதானம் ஒவ்வொரு அணிக்கும் ஒர்க் அவுட்டாகி வருகிறது. அதன்படி ஜெய்ப்பூரில் நடந்த இந்தப் போட்டி ராஜஸ்தானுக்கு நன்றாகவே கை கொடுத்துள்ளது. இந்தப் போட்டி உள்பட இதுவரையில் நடந்த 9 போட்டிகளில் அந்தந்த ஹோம் அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் நந்த்ரே பர்கர், யுஸ்வேந்திர சாகல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஆவேஷ் கான் ஒரு விக்கெட் கைப்பற்றினார்.
- Asianet News Tamil
- David Warner
- Delhi Capitals
- Dhruv Jurel
- IPL 2024 asianet news
- IPL 2024 schedule
- IPL 9th match
- IPL cricket 2024 live updates
- IPL point table 2024
- Indian Premier Leaque
- Jos Buttler
- Khaleel Ahmed
- Mitchell Marsh
- Mukesh Kumar
- Nandre Burger
- RR vs DC
- RR vs DC Live
- RR vs DC Live Score
- RR vs DC ipl 2024
- Rajasthan Royals
- Rajasthan Royals vs Delhi Capitals
- Rishabh Pant
- Riyan Parag
- Sanju Samson
- Shimron Hetmyer
- TATA IPL 2024 news
- Yashasvi Jaiswal
- watch RR vs DC Live 28 March 2024
- Tristan Stubbs