கேரம் பால் அரக்கன்: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் அஸ்வின்

பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Ravichandran Ashwin announced his retirement from international cricket vel

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் மூத்த பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்றிருந்தார். ஆஸ்திரேலியா வீரர்களுக்கு அஸ்வின் பெரும் தலைவலியாக இருப்பார் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால், தற்போது வரை நடைபெற்ற 3 போட்டிகளிலும் அஸ்வின் விளையாட பிளேயிங் 11ல் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அஸ்வின் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணி பல இக்கட்டான சூழலை சந்தித்த போது அஸ்வின் அதனை சாதுரியமாகக் கையாண்டு இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்துள்ளார். 

அஸ்வினின் சாதுரியம்
உதாரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையேயான டி20 போட்டி ஒன்றில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 159 ரன்கள் சேர்த்தது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கட்டத்தில் கடைசி பந்துக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலையில் களத்திற்கு வந்த அஸ்வின் சாதுரியமாக முதல் பந்தை வைடிலும், இரண்டாவது பந்தை பவுண்டரிக்கு அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். இந்த நிகழ்வை எந்தவொரு கிரிக்கெட் ரசிகரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை.
 

 

தோனியின் படைத்தளபதி
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, அணிக்கு பல இளம் வீரர்களை அழைத்து வந்தவர். அந்த வகையில் சென்னை அணியில் அறிமுகப்படுத்தப்பட்டு, தோனியால் இந்திய அணிக்கு அழைத்து வரப்பட்டவர் தான் ரவிச்சந்திரன் அஸ்வின். தோனியின் இறுதிக்கட்ட கிரிக்கெட் வாழ்க்கையில் அஸ்வின் அவருக்கு உதவியாக பல விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

உலகின் தலை சிறந்த ஆல் ரவுண்டர்
சுழற்பந்து வீச்சு மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் அணிக்கு பல நேரங்களில் பெரும் உதவியாக இருந்துள்ளார். டெஸ்ட் தொடரில் 6 சதங்களை பூர்த்தி செய்துள்ளார். 3 தர போட்டிகளிலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்த அஸ்வின் டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். அதே போன்று சிறந்த பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 5வது வீரரா உள்ளார்.

அஸ்வினின் கிரிக்கெட் வாழ்க்கை

2010ம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். மேலும் அணிக்காக 3503 ரன்களையும் சேர்த்துள்ளார். மொத்தமாக 37 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

இதே போன்று 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்டுகளையும், டி20யில் 65 போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார். ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 765 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

சென்னையில் அஸ்வின்

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட அஸ்வின் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் விலைக்கு வாங்கப்பட்டுள்ளார். வரும் 2025 ஐபிஎல் தொடரில் அஸ்வின் மஞ்சள் ஜெர்சியில் விளையாடுவதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios