'யார்ரா இந்த பையன்'; ஆஸி. பவுலிங்கை நொறுக்கிய ஆகாஷ் தீப்; கைகொடுத்த பும்ரா; தோல்வியில் இருந்து தப்பிய இந்தியா!
ஆகாஷ் தீப் மற்றும் பும்ராவின் சிறப்பான பேட்டிங்கால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியில் இருந்து தப்பியுள்ளது.
India vs Australia Test Series
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடந்து வருகிறது.
இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 445 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. வழக்கம்போல் இந்திய பவுலர்களுக்கு தண்ணி காட்டிய டிராவிஸ் ஹெட் (160 பந்தில் 152 ரன்), ஸ்டீபன் ஸ்மித் (100 ரன்) அதிரடி சதம் விளாசினார்கள். இந்திய தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். பின்பு முதல் இன்னிங்சை ஆடி வரும் இந்திய அணி 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 52 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது.
Bhumrah Batting
இன்று 4வது நாள் ஆட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா (10 ரன்) வழக்கம்போல் விரைவில் அவுட்டானார்.
இதனால் 74/5 என இந்திய அணி தடுமாறிய நிலையில், கே.எல்.ராகுலும், ரவீந்திர ஜடேஜாவும் ஓரளவு சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக கே.எல்.ராகுல் டெஸ்ட்டில் தனது 16வது அரைசதத்தை அடித்தார். சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 84 ரன்னில் லயன் பந்தில் அவுட்டானார்.
இதேபோல் மறுபக்கம் சிறப்பாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 21வது அரைசதத்தை விளாசினார். தொடர்ந்து நிதிஷ் குமார் ரெட்டி (16), முகமது சிராஜ் (1) விரைவில் வெளியேறினார்கள். மேலும் ஜடேஜாவும் 77 ரன்னில் உடனே அவுட்டாக, இந்திய அணி 213/9 என பரிதவித்தது. ஒரு விக்கெட் கையில் இருந்த நிலையில் ஃபாலோ ஆன் தவிர்க்க 35 ரன்கள் தேவைப்பட்டது.
இதனால் இந்த ஒரு விக்கெட் சீக்கிரம் போய் விடும்; இந்திய அணி ஃபாலோ ஆன் ஆகி விடும் என ஆஸ்திரேலிய ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய ரசிகர்களே நினைத்தனர். ஆனால் களத்தில் இருந்த ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் இவர்களின் கணிப்பை எல்லாம் பொய்யாக்கி கைதேர்ந்த பேட்ஸ்மேன்கள் போல் ஆடி ரன்களை திரட்டினார்கள்.
இருந்த ஒரு நம்பிக்கையும் போச்சு; சதத்தை தவறவிட்ட கே.எல்.ராகுல்; ஃபாலோ ஆன் தவிர்க்க இந்தியா போராட்டம்!
KL Rahul Batting
பும்ரா கம்மின்ஸின் பவுன்சர் பந்தை சிக்சருக்கு விளாசி அனைவருக்கும் ஆச்சரியம் அளித்தார். மறுபக்கம் ஆகாஷ் தீப் சில அற்புதமான கவர் டிரைவ்களை ஆடி ரன்களை எடுத்தார். கம்மின்ஸ் பந்தில் பிரம்மாண்ட சிக்சர் ஒன்றை பறக்க விட்டார். கம்மின்ஸ், ஸ்டார்க், லயன் என உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் பந்துவீசியும் இருவரின் விக்கெட்டை எடுக்க முடியவில்லை. ஜோஸ் ஹேசில்வுட் காயம் காரணமாக வெளியேறியதால் இவர்கள் மூவருமே மாறி மாறி பந்து வீசினார்கள்.
ஆனால் பும்ரா, ஆகாஷ் தீப் நேர்த்தியான ஆட்டத்தால் இந்திய அணி ஃபாலோ ஆன் தவிர்த்தது. 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழந்து 252 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவை விட 193 ரன்கள் பின்னிலையில் உள்ளது. கடைசி கட்டத்தில் ஹீரோவாக ஜொலித்த ஆகாஷ் தீப் 31 பந்தில் 27 ரன்களுடனும், பும்ரா 10 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
Bhumrah Bowling
இவர்கள் இருவரும் கடைசி விக்கெட்டுக்கு 9 ஓவர்களில் 39 ரன்கள் திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகாஷ் தீப், பும்ராவின் சிறப்பான பேட்டிங்கால் இந்தியா ஃபாலோ ஆன் தவிர்த்தது மட்டுமின்றி தோல்வியில் இருந்தும் தப்பியுள்ளது. ஏனெனில் இந்தியா ஆல் அவுட் ஆன பிறகு, ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து இந்தியாவுக்கு ஒரு டார்கெட் நிர்ணயம் செய்ய வேண்டும்.
ஆனால் நாளை ஒருநாள் மட்டுமே பாக்கி உள்ளதாலும், மழை அச்சுறுத்தல் இருப்பதாலும் இந்த டெஸ்ட் டிராவில் முடியவே அதிக வாய்ப்புள்ளது. இந்தியா பேட்டிங்கின்போது கிட்டத்தட்ட ஒருநாள் மழையால் பாதிக்கப்பட்டதால் இந்திய அணி தோல்வியில் இருந்து தப்பிக்க மழையும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
செஸ் மட்டுமல்ல இதிலும் இவர் 'கிங்'; துளியும் பயமின்றி பங்கி ஜம்ப் செய்த குகேஷ்!