MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • இந்தியா vs இங்கிலாந்து.. சஞ்சு சாம்சனின் பலவீனம்.. வலைவிரிக்கும் ஆர்ச்சர்.. சேட்டன் தப்புவாரா?

இந்தியா vs இங்கிலாந்து.. சஞ்சு சாம்சனின் பலவீனம்.. வலைவிரிக்கும் ஆர்ச்சர்.. சேட்டன் தப்புவாரா?

India vs England T20 WC 2026: இங்கிலாந்துக்கு எதிராக சஞ்சு சாம்சனின் பேட்டிங் ரெக்கார்டு அவ்வளவு சிறப்பாக இல்லை. ஐந்து இன்னிங்ஸ்களில் அவர் வெறும் 51 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 

2 Min read
Author : Rayar A
Published : Mar 05 2026, 02:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி போட்டி
Image Credit : x

இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி போட்டி

டி20 உலகக் கோப்பை 2வது அரையிறுதியில் இந்தியாவும், இங்கிலாந்தும் இன்று மோதுகின்றன. இந்திய அணி எளிதாக வெற்றி பெற்று பைனலுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஒரு பெரிய தலைவலி தொடங்கியுள்ளது. அது வான்கடே மைதானத்தில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சை சஞ்சு சாம்சன் எப்படி எதிர்கொள்வார் என்பதுதான்.

ஆர்ச்சருக்கு எதிராக தடுமாறிய சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சனை அதிகம் திணறடித்த பந்துவீச்சாளர்களில் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரும் ஒருவர். ஆர்ச்சருக்கு எதிராக விளையாடிய ஐந்து இன்னிங்ஸ்களில் சஞ்சு சாம்சன் மூன்று முறை ஆட்டமிழந்துள்ளார். ஆர்ச்சருக்கு எதிராக சஞ்சுவின் பேட்டிங் சராசரி வெறும் 8.33 ஆகும். 

ஆர்ச்சர் வீசிய 23 பந்துகளில் 13 பந்துகளில் சஞ்சு ஒரு ரன் கூட எடுக்க முடியவில்லை. வான்கடே பிட்ச்சில் கிடைக்கும் கூடுதல் பவுன்ஸைப் பயன்படுத்தி ஷார்ட் பால்கள் மூலம் சஞ்சுவை ஆட்டமிழக்கச் செய்ய இங்கிலாந்து அணி திட்டமிட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
இங்கிலாந்துக்கு எதிராக மோசமான ரிக்கார்ட்
Image Credit : Getty

இங்கிலாந்துக்கு எதிராக மோசமான ரிக்கார்ட்

இதேபோல், சாம் கரனும் ஐபிஎல் தொடரில் சஞ்சுவை இரண்டு முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். மற்ற அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடினாலும், இங்கிலாந்துக்கு எதிராக சஞ்சு சாம்சனின் பேட்டிங் ரெக்கார்டு அவ்வளவு சிறப்பாக இல்லை. ஐந்து இன்னிங்ஸ்களில் அவர் வெறும் 51 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

 கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சஞ்சு 26, 5, 3, 1, மற்றும் 16 ரன்கள் எடுத்திருந்தார். இங்கிலாந்துக்கு எதிராக சஞ்சுவின் பேட்டிங் சராசரி 10.20 மற்றும் ஸ்டிரைக் ரேட் 118.60 மட்டுமே.

கூடுதல் பாஸ்ட் பவுலர்

சஞ்சுவின் ஷார்ட் பால் பலவீனத்தைக் கருத்தில் கொண்டு, இங்கிலாந்து அணி கூடுதல் வேகப்பந்து வீச்சாளரைச் சேர்க்க ஆலோசித்து வருகிறது. தகவல்களின்படி, ஜோஷ் டங் அணியில் அறிமுகமாகும் வாய்ப்புள்ளது. இதற்கு முன்பு, வேகப்பந்து வீச்சாளர்களான சாகிப் மஹ்மூத் மற்றும் மார்க் வுட் ஆகியோரும் ஷார்ட் பால்கள் மூலம் சஞ்சுவின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

34
சராசரி மிகவும் குறைவு
Image Credit : Getty

சராசரி மிகவும் குறைவு

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராகவும் சஞ்சுவின் சராசரி 15க்கும் குறைவாகவே உள்ளது. ஆனால், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராகக் காட்டிய சிறப்பான ஃபார்மை இங்கிலாந்துக்கு எதிராகவும் தொடர்வார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். கொல்கத்தாவில் வெளிப்படுத்திய அந்தப் போராட்ட குணத்தை வான்கடேவிலும் சஞ்சு வெளிப்படுத்தினால், இந்தியா இறுதிப் போட்டிக்குச் செல்லும் பாதை எளிதாகும்.

44
கணிப்புகளை தவிடுபொடியாக்குவாரா சஞ்சு?
Image Credit : Getty

கணிப்புகளை தவிடுபொடியாக்குவாரா சஞ்சு?

சூப்பர்-8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் 196 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன், வெறும் 50 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் அடித்து, 4 பந்துகள் மீதமிருந்த நிலையில் அணியை வெற்றி பெறச் செய்தார். தற்போது அரையிறுதியிலும் சஞ்சு அதே ஃபார்மை தொடர வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
சஞ்சு சாம்சன்
விளையாட்டு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs WI 4th T20: 2 அதிரடி மாற்றம்.. வைபவ் சூர்யவன்ஷி கம்பேக்.. சிக்சர் மன்னனுக்கு இடமில்லை.. பிளேயிங் லெவன்!
Recommended image2
IND vs WI: 250 ரன் அடிச்சும் தோத்துட்டோமே.. இந்திய பவுலிங் கோச்சை விளாசித் தள்ளிய ஜாம்பவான்!
Recommended image3
Harmanpreet Kaur Net Worth: கோடிகளை குவித்த ஹர்மன்ப்ரீத் கவுர்! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?
Related Stories
Recommended image1
இந்தியா vs இங்கிலாந்து.. டி20 உலகக்கோப்பையில் கெத்து காட்டியது யார்? முழு ரிப்போர்ட்!
Recommended image2
இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி.. அபிஷேக் சர்மா நீக்கம்.. அதிரடி வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved