இருந்த ஒரு நம்பிக்கையும் போச்சு; சதத்தை தவறவிட்ட கே.எல்.ராகுல்; ஃபாலோ ஆன் தவிர்க்க இந்தியா போராட்டம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இந்திய அணி விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது. கே.எல்.ராகுல் 84 ரன்னில் அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
KL Rahul Batting
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும், 3வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடந்து வருகிறது.
இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 445 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. டிராவிஸ் ஹெட் தொடர்ந்து 2வது அதிரடி சதம் (160 பந்தில் 152 ரன்) எடுத்து அவுட் ஆனார். மறுபக்கம் ஸ்டீபன் ஸ்மித்தும் சூப்பர் சதம் (100 ரன்) விளாசியுள்ளார். இந்திய தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
Virat Kohli Batting
பின்பு முதல் இன்னிங்சை ஆடி வரும் இந்திய அணி 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 52 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. இன்று 4வது நாள் ஆட்டம் நடந்து வரும் நிலையில், கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்தார். வெறும் 10 ரன்கள் எடுத்த கம்மின்ஸ் பந்தில் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
பும்ராவை குரங்கு இனத்துடன் ஒப்பிட்டு பேச்சு; மன்னிப்பு கேட்ட ஈஷா குகா!
India vs Australia Test Series
இதனால் 74/5 என இந்திய அணி தடுமாறிய நிலையில், கே.எல்.ராகுலும், ரவீந்திர ஜடேஜாவும் அணியை ஓரளவு சரிவில் இருந்து மீட்டனர். எந்தவித தடுமாற்றமுமின்றி ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு விரட்டியடித்த கே.எல்.ராகுல் டெஸ்ட்டில் தனது 16வது அரைசதத்தை விளாசினார். சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 84 ரன்னில் லயன் பந்தில் கட் ஷாட் அடிக்க முயன்ற கே.எல்.ராகுல் ஸ்மித்தின் சூப்பர் கேட்ச்சில் வெளியேறினார். அவர் மொத்தம் 8 பவுண்டரிகளை விளாசினார்.
India vs Australia 3rd Test
இதன்பிறகு ரவீந்திர ஜடேஜாவும், நிதிஷ் குமார் ரெட்டியும் விக்கெட் இழக்காமல் கவனமுடன் ஆடி வருகின்றனர். இந்திய அணி உணவு இடைவேளை வரை 6 விக்கெட் இழந்து 167 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா 278 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஃபாலோ ஆன் தவிர்க்க போராடி வருகிறது. ரவீந்திர ஜடேஜா 41 ரன்களுடனும், நிதிஷ் குமார் ரெட்டி 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
முடிவுக்கு வரும் ஷகிப் அல் ஹசனின் கிரிக்கெட் வாழ்க்கை? அல் ஹசன் பந்து வீச தடை விதிப்பு