MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • கிரிக்கெட் வாரிசு vs பிஸ்னஸ் வாரிசு.. அர்ஜுன் டெண்டுல்கர்-சானியா.. சொத்து மதிப்பில் 'கிங்' யார்?

கிரிக்கெட் வாரிசு vs பிஸ்னஸ் வாரிசு.. அர்ஜுன் டெண்டுல்கர்-சானியா.. சொத்து மதிப்பில் 'கிங்' யார்?

அர்ஜுன் டெண்டுல்கர், தொழில் அதிபரின் மகள் சானியாவின் திருமணம் மும்பையில் நடந்து முடிந்துள்ளது. சொத்து மதிப்பு யாருக்கு அதிகம்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Mar 05 2026, 05:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அர்ஜுன் டெண்டுல்கர் சானியா திருமணம்
Image Credit : x

அர்ஜுன் டெண்டுல்கர்-சானியா திருமணம்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனும், கிரிக்கெட் வீரருமான அர்ஜுன் டெண்டுல்கருக்கும், தொழில் அதிபரின் மகள் சானியா சந்தோக்குக்கும் மும்பையில் உள்ள தி செயின்ட் ரெஜிஸ் ஹோட்டலில் இன்று (மார்ச் 5) திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் தோனி, டிராவிட், யுவராஜ் சிங் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள், சினிமா, அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
குடும்ப நண்பர்கள்
Image Credit : instagram- shaadifever

குடும்ப நண்பர்கள்

நீண்டகால நண்பர்களாக இருவரும் காதலில் விழுந்து இப்போது திருமணம் செய்துள்ளனர். சச்சின் டெண்டுல்கரும், சானியாவின் தாத்தா ரவி காயும் நண்பர்கள். சச்சின் கிரிக்கெட் ஜாம்பவான் என்றால், ரவி 'காய் கிராவிஸ்' பிரம்மாண்ட வணிக குழுமத்தின் தலைவர். இரு குடும்பத்தினருக்கும் இடையே பல வருடங்களாக நட்பு நீடித்து வருகிறது. மணமக்கள் இருவருமே ஜாம்பவான்களின் வாரிசுகள் என்பதால் அர்ஜுன் டெண்டுல்கர், சானியா சந்தோக்கின் சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம்.

34
அர்ஜுன் டெண்டுல்கரின் சொத்து மதிப்பு
Image Credit : X@entertainm58059

அர்ஜுன் டெண்டுல்கரின் சொத்து மதிப்பு

இந்த மாத நிலவரப்படி அர்ஜுன் டெண்டுல்கரின் சொத்து மதிப்பு ரூ.22 கோடி ஆகும். இவரது வருமானத்தில் பெரும் பகுதி ஐபிஎல் ஒப்பந்தங்கள் (5 சீசன்களில் சுமார் ரூ. 1.7 கோடி) மற்றும் கோவா அணிக்காக விளையாடியதன் மூலம் வருகிறது. மேலும் இவர் விளம்பரங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ. 50 லட்சம் முதல் 1 கோடி வரை சம்பாதிக்கிறார். அதே வேளையில் இவரது குடும்ப சொத்து மதிப்பு ரூ.1,400 கோடிக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

44
சானியா சொத்து மதிப்பு
Image Credit : Sachin

சானியா சொத்து மதிப்பு

சானியா சந்தோக்கின் சொத்து மதிப்பு ரூ.80 லட்சம் முதல் ரூ.4 கோடி வரை இருக்கும். சானியா 'Mr Paws Pet Spa & Store' என்ற சொகுசு செல்லப்பிராணி ஸ்பா மையத்தைத் தொடங்கி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இவரது தந்தையின் 'கிராவிஸ் குரூப்' சாம்ராஜியத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,000 கோடிக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது. 

சொத்து மதிப்பில் சானியாவை விட அர்ஜுன் டெண்டுல்கரே முன்னிலையில் உள்ளார். சச்சின் டெண்டுல்கரை விட அவரது மனைவி அஞ்சலி 6 வயது மூத்தவர். இதேபோல் சானியா சந்தோக்கும் அர்ஜுன் டெண்டுல்கரை விட ஒரு வருடம் மூன்று மாதங்கள் மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சச்சின் டெண்டுல்கர்
விளையாட்டு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs WI 5th T20: பெங்களூருவில் கொட்டித் தீர்த்த மழை.. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடர் 2-2 என சமன்!
Recommended image2
டாஸ் வென்றும் இந்தியாவுக்கு பேரிடி! ஹோப்பின் சதம், சாம்சனின் போராட்டம்... தோல்விக்கான 3 காரணங்கள்!
Recommended image3
டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் வெள்ளை டிரஸ் ஏன்? இந்த சுவாரஸ்யமான வரலாறு தெரியுமா?
Related Stories
Recommended image1
அர்ஜுன் டெண்டுல்கர் - சானியா லவ் ஸ்டோரி.. தூது சென்ற சாரா.. சுவாரஸ்யமான பின்னணி!
Recommended image2
இந்தியா vs இங்கிலாந்து.. சஞ்சு சாம்சனின் பலவீனம்.. வலைவிரிக்கும் ஆர்ச்சர்.. சேட்டன் தப்புவாரா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved