MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • டி20 உலகக்கோப்பை.. ஹோட்டல் ரூமில் அலறிய பெண் ஊழியர்.. சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் வீரர்!

டி20 உலகக்கோப்பை.. ஹோட்டல் ரூமில் அலறிய பெண் ஊழியர்.. சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் வீரர்!

சட்டச் சிக்கலில் சிக்குவதைத் தவிர்க்க, மேலாளர் நவைத் சீமா பாகிஸ்தான் வீரர் சார்பாக மன்னிப்புக் கேட்டுள்ளார். மேலும், அந்த வீரருக்கு உடனடியாகப் பெரும் தொகையை அபராதமாக விதித்து, இப்போதைக்கு இந்த விவகாரத்தை முடித்து வைத்துள்ளார். 

2 Min read
Author : Rayar A
Published : Mar 05 2026, 03:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
டி20 உலகக்கோப்பை 2026
Image Credit : Getty

டி20 உலகக்கோப்பை 2026

டி20 உலகக் கோப்பையில் படுமோசமாக விளையாடிய பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றில் மூட்டையை கட்டியது. இந்த நிலையில், இலங்கையின் கண்டியில் உள்ள 'கோல்டன் கிரவுன்' ஹோட்டலில் தங்கியிருந்த, பெயர் குறிப்பிடப்படாத பாகிஸ்தான் வீரர் ஒருவர், ஹவுஸ்கீப்பிங் பணியில் இருந்த பெண் ஊழியரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டு அபராதத்திற்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
பெண் ஊழியரிடம் அநாகரீகமாக நடந்த பாகிஸ்தான் வீரர்
Image Credit : Getty

பெண் ஊழியரிடம் அநாகரீகமாக நடந்த பாகிஸ்தான் வீரர்

இது தொடர்பாக‌'டெலிகாம் ஏசியா ஸ்போர்ட்' வெளியிட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கு எதிரான முக்கியமான சூப்பர் 8 போட்டிக்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பெண் ஊழியர் தனது தினசரி பணிக்காக வீரரின் அறைக்குச் சென்றபோது, அவர் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் சத்தமாகக் கத்தியுள்ளார். உடனடியாக ஹோட்டல் பாதுகாப்பு ஊழியர்கள் விரைந்து வந்து அவரை மீட்டுள்ளனர்.

மன்னிப்பு கேட்ட மேலாளர்

பின்னர், ஹோட்டல் மேலாளர், பாகிஸ்தான் அணி மேலாளர் நவைத் சீமாவிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். ஹோட்டல் நிர்வாகம் அந்த வீரருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது. ஆனால், இலங்கையில் சட்டச் சிக்கலில் சிக்குவதைத் தவிர்க்க, மேலாளர் நவைத் சீமா வீரர் சார்பாக மன்னிப்புக் கேட்டுள்ளார். மேலும், அந்த வீரருக்கு உடனடியாகப் பெரும் தொகையை அபராதமாக விதித்து, இப்போதைக்கு இந்த விவகாரத்தை முடித்து வைத்துள்ளார். ஆனால், இந்தச் சம்பவத்தால் போட்டியின் போது அணியின் சூழல் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Related Articles

Related image1
இந்தியா vs இங்கிலாந்து.. சஞ்சு சாம்சனின் பலவீனம்.. வலைவிரிக்கும் ஆர்ச்சர்.. சேட்டன் தப்புவாரா?
Related image2
இந்தியாவுடன் தோற்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு PCB மரண அடி.. சம்பளம் கட் + ரூ.50 லட்சம் அபராதம்!
33
கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
Image Credit : stockphoto

கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

இந்த விவகாரம் இத்துடன் முடியவில்லை. அணி பாகிஸ்தானுக்குத் திரும்பியுள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்ட வீரர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் முன் ஆஜராக வேண்டியுள்ளது. சர்வதேசப் பயணங்களின் போது இதுபோன்ற ஒழுங்கற்ற நடத்தையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாரியத்தின் உயர் அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். 

தொடர் சர்ச்சையில் பாகிஸ்தான் வீரர்கள்

பாகிஸ்தான் வீரர்கள் வெளிநாட்டுப் பயணங்களில் இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு ஹைதர் அலி 2025ம் ஆன்டு பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, மான்செஸ்டர் காவல்துறையினர் இவரைக் கடுமையான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்தனர்.

 ஆதாரங்கள் இல்லாததால் பின்னர் விடுவிக்கப்பட்டார். இதேபோல் பாகிஸ்தான் அணியின் ஊழியரான மலங் அலி என்பவர் மலேசியப் பயணத்தின் போது ஒரு பெண் ஊழியரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டு தண்டனைக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
பாகிஸ்தான்

Latest Videos
Recommended Stories
Recommended image1
IRE vs IND T20: இந்தியாவின் மோசமான தோல்விக்கு 5 பெரும் காரணங்கள்! இந்த' 2 வீரர்கள் படுமோசம்!
Recommended image2
Women's T20 World Cup: ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்து வெளியேறிய இந்தியா! ரசிகர்கள் ஷாக்!
Recommended image3
IND vs IRE 2nd T20: இந்தியாவுக்கு மரண அடி கொடுத்த அயர்லாந்து! டி20 தொடரை வென்று சரித்திர சாதனை!
Related Stories
Recommended image1
இந்தியா vs இங்கிலாந்து.. சஞ்சு சாம்சனின் பலவீனம்.. வலைவிரிக்கும் ஆர்ச்சர்.. சேட்டன் தப்புவாரா?
Recommended image2
இந்தியாவுடன் தோற்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு PCB மரண அடி.. சம்பளம் கட் + ரூ.50 லட்சம் அபராதம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved