MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • வான்கடேனாலே வான வேடிக்கை தான்.. இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா இந்தியா..?

வான்கடேனாலே வான வேடிக்கை தான்.. இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா இந்தியா..?

டி20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதும்.

2 Min read
Author : Velmurugan s
| Updated : Mar 05 2026, 07:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இந்தியா Vs இங்கிலாந்து..
Image Credit : Getty

இந்தியா Vs இங்கிலாந்து..

கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய திருவிழாவான டி20 உலகக் கோப்பை அதன் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இன்று இரவு 7:00 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த இந்திய அணி சம பலத்துடன் வலம் வரும் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. 2022 மற்றும் 2024-க்குப் பிறகு, மூன்றாவது முறையாக ஒரு உலகக் கோப்பை அரையிறுதியில் இந்த இரு அணிகளும் மோதுவதால், இது ஒரு 'ஹாட்ரிக்' மோதலாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
இந்தியாவின் அதிரடிப் பயணம்
Image Credit : Getty

இந்தியாவின் அதிரடிப் பயணம்

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, லீக் சுற்றில் ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் கம்பீரமாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இருப்பினும், சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியைத் தழுவியது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், வாழ்வா-சாவா என்ற கட்டாயத்தில் ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடிய இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. குறிப்பாக மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான போட்டியில் சஞ்சு சாம்சனின் அதிரடியான 97* (50 பந்துகள்) ரன்களின் உதவியுடன் இந்தியா வெற்றி பெற்றது.

தற்போது வரை இந்தியாவின் பேட்டிங்கில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் (231 ரன்கள்) மற்றும் இஷான் கிஷன் முன்னிலையில் உள்ளனர். பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி 12 விக்கெட்டுகளுடன் மிரட்டி வருகிறார். இருப்பினும், இன்றைய போட்டியில் இங்கிலாந்து வீரர்களைக் கட்டுப்படுத்த 'மிஸ்டரி ஸ்பின்னர்' வருணுக்குப் பதிலாக அனுபவ வீரர் குல்தீப் யாதவ் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

34
மீண்டெழுந்த இங்கிலாந்து
Image Credit : X/ICC

மீண்டெழுந்த இங்கிலாந்து

மறுபுறம், ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தத் தொடரில் மிகவும் சவாலான பாதையைக் கடந்து வந்துள்ளது. நேபாளத்திற்கு எதிரான லீக் போட்டியில் வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் தட்டுத்தடுமாறி வெற்றி பெற்ற அந்த அணி, சூப்பர் 8 சுற்றில் விஸ்வரூபம் எடுத்தது. பாகிஸ்தான், இலங்கை மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளைத் தோற்கடித்து தனது பிரிவில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. ஹாரி புரூக் (228 ரன்கள்) மற்றும் வில் ஜாக்ஸ் ஆகியோரது அதிரடி ஆட்டம் இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும்.

44
மைதானம் மற்றும் வானிலை
Image Credit : X@BCCI

மைதானம் மற்றும் வானிலை

அதிரடி ரன் குவிப்புக்கு பெயர் பெற்ற மும்பை வான்கடே மைதானம் பொதுவாக பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கமாகக் கருதப்பட்டாலும், சமீபத்திய வெப்ப நிலை காரணமாக புற்கள் ஓரளவு பராமரிக்கப்பட்டுள்ளன. இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆரம்பத்தில் கைகொடுக்கலாம். மாலை நேரத்தில் பனிப்பொழிவு (Dew factor) இருக்கும் என்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்யவே அதிக வாய்ப்புள்ளது.

இந்தியாவின் கோட்டை வான்கடே..?

சர்வதேச டி20 போட்டிகளில் வான்கடே மைதானத்தில் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்த முக்கிய விவரங்கள் இதோ:

ஒட்டுமொத்த சாதனை விளையாடிய போட்டிகள்: 7

வெற்றிகள்: 5

தோல்விகள்: 2

வெற்றி சதவீதம்: சுமார் 71%

இந்திய அணி இந்த மைதானத்தில் கடைசியாக 2016-ஆம் ஆண்டு (மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக) ஒரு டி20 போட்டியில் தோற்றது. அதன்பிறகு கடந்த 9 ஆண்டுகளாக இங்கு விளையாடிய அனைத்து டி20 போட்டிகளிலும் இந்தியா தோல்வியே சந்திக்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது.

உத்தேச லெவன்:

இந்தியா: சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (C), ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங்/ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்/வருண் சக்கரவர்த்தி.

இங்கிலாந்து: பில் சால்ட், ஜோஸ் பட்லர், வில் ஜாக்ஸ், ஹாரி புரூக் (C), லியாம் லிவிங்ஸ்டன், சாம் கர்ரன், ஜேமி ஓவர்டன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷித், ரீஸ் டாப்லி.

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டி20 உலகக் கோப்பை
இந்தியா
இந்திய கிரிக்கெட் அணி
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs NZ 1st ODI: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி.. கோலி அதிரடி!
Recommended image2
Glenn Maxwell: கிரிக்கெட்டுக்கு 'குட்பை' சொன்ன தமிழ்நாட்டு மருமகன்! 'பிக் ஷோ' கிளென் மேக்ஸ்வெல் திடீர் ஒய்வு!
Recommended image3
IPL 2027 Auction: ரூ.14 கோடி பிளேயரை கழட்டிவிடும் சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் பிளான்!
Related Stories
Recommended image1
டி20 உலகக்கோப்பை.. கை நழுவும் கேட்ச்கள்.. இந்தியாவின் பீல்டிங் மோசம்.. ஜாம்பவான் கவலை!
Recommended image2
இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி.. அபிஷேக் சர்மா நீக்கம்.. அதிரடி வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved