100 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை, 101ஆவது பந்தில் விக்கெட்: தட்டி தூக்கிய ரஷீத் கான் சாதனை!
ஆப்கானிஸ்தான் அணியின் சிறந்த பந்து வீச்சாளரான ரஷீத் கான் பாகிஸ்தானுக்கு எதிரான அதுவும் டி20 போட்டியில் 100 பந்துகள் வீசி ஒரு பவுண்டரி கூட கொடுக்காமல் சாதனை படைத்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. இதில், பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர்களாக பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஆதலால், பாகிஸ்தான் இளம் வீரர்கள் கொண்ட படையுடன் களம் கண்டது. இந்த 3 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கு ஷதாப் கான் கேப்டனாக செயல்பட்டார். இதில் முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல்லில் 701 பவுண்டரிகள், 136 சிக்சர்கள் அடித்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ஷிகர் தவான்!
இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்று கைப்பற்றியது. இதன் மூலமாக ஆப்கானிஸ்தான் வரலாற்று சாதனை படைத்தது. ஆம், பாகிஸ்தானுக்கு எதிராக டி20 தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
கையில் சுரைக்காயோடு எண்ட்ரி கொடுத்து தத்துவம் பேசிய லாக்கி ஃபெர்குசன் - வைரலாகும் வீடியோ!
இதைத் தொடர்ந்து நேற்று நடந்த கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் விக்கெட் கீப்பரான அசாம் கான் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக, முகமது ஹரிஷ் இடம் பெற்றார். ஆனால், அவர் 3 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் சிறந்த பந்து வீச்சாளர் என்பது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தெரியும். தற்போது அவர் டி20 போட்டியில் ஒரு பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அது இப்போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான் டி20 போட்டியில் நிறைவேறியுள்ளது.
புதிய ஐபிஎல் அணியில் இணைய போவதாக அறிவிப்பு - வீடியோ வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஸ்டீவ் ஸ்மித்!
ஆம், தொடர்ந்து டி20 போட்டிகளீல் 100 பந்துகளை வீசி, ஒரு பவுண்டரி கூட அடிக்க விடாமல் 101ஆவது பந்தில் விக்கெட் கைப்பற்றியிருக்கிறார். யுஏஇ அணிக்கு எதிராக 2 போட்டிகள், பாகிஸ்தான் அணிக்கு எதிராக 2 போட்டிகளில் எந்த பவுண்டரியும் தரவில்லை. பவுண்டரி தராமல் தொடர்ந்து 100 பந்துகள் வீசி சாதனை படைத்துள்ளார். 101 ஆவது பந்தில் பாகிஸ்தான் வீரர் அப்துல்லா ஷபீக் விக்கெட்டை எடுத்துள்ளார். அதன் பிறகு ரஷீத் கானின் 107ஆவது பந்தில் பாகிஸ்தான் வீரர் சயூம் அயூப் சிக்சர் விளாசியுள்ளார்.
இப்படியொரு சாதனையை இவர் ஒருவரால் மட்டுமே படைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்த டி20 தொடருக்கு இவர் தான் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.