பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரின் 8 ஆவது போட்டி கவுகாத்தி மைதானத்தில் இன்று நடந்தது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிராப்சிம்ரன் சிங் சரவெடியாக வெடித்தார். அவர் 34 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் உள்பட 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஜித்தேஷ் சர்மாவும் தன் பங்கிற்கு 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

Sudhir Naik: முன்னாள் இந்திய வீரர், மும்பை கேப்டன் சுதீர் நாயக் சிகிச்சை பலனின்றி காலமானார்!

எனினும், பானுகா ராஜபக்‌ஷா 1 ரன்னில் ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். சிக்கந்தர் ராஸா (1), ஷாருக் கான் (11), ஜித்தேஷ் சர்மா (27) என்று ரன்கள் சேர்த்தனர். ஒரு பக்கம் கேப்டன் பொறுப்பை உணர்ந்து ஆடிய ஷிகர் தவான் 36 பந்துகளில் தனது 50ஆவது அரை சதத்தை பூர்த்தி செய்தார். அவர் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்து 86 ரன்கள் சேர்த்தார். அதோடு தனது 50ஆவது அரைசதத்தையும் பூர்த்தி செய்தார். இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது.

பந்து வீச்சு தரப்பில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு ரன் கைப்பற்றினார். ஜேசன் ஹோல்டர் 4 ஓவர்களில் 29 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார். சஹால் தன் பங்கிற்கு ஒரு விக்கெட் கைப்பற்றினார். இதையடுத்து 198 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வழக்கம் போல் யஷஸ்வி ஜெய்ஷ்வால் களமிறங்கினார். ஆனால், அவருடன் ஜோஸ் பட்லர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்கினார்.

IPL 2023: 10 வருடங்களுக்குப் பிறகு ஐபிஎல் கிரிக்கெட்டில் ஓபனிங் இறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

ஆனால், யஷஸ்வி 11 ரன்களில் வெளியேற, அஸ்வின் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜோஸ் பட்லர் 19 ரன்களில் வெளியேறினார். கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி 25 பந்துகளில் ஒரு சிக்ஸர் 5 பவுண்டரி உள்பட 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 21, ஷிம்ரன் ஹெட்மயர் 36, ரியான் பராக் 20 என்று வரிசையாக ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரை சாம் கரன் வீசினார். கடைசி 3 பந்தில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இம்பேக்ட் பிளேயர் த்ருவ் ஜூரேல் களத்தில் இருந்தார். கடைசி 3 பந்தில் 6 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்து 5 ரன்களில் தோல்வியடைந்தது.

IPL 2023: வெடி வெடின்னு வெடித்த பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் - ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 198 ரன்கள் இலக்கு!

பந்து வீச்சு தரப்பில் பஞ்சாப் அணியின் நேதன் எல்லீஸ் 4 விக்கெட் கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட் கைப்பற்றினார். ராஜஸ்தான் ராயல்ஸின் ஹோம் மைதானம் என்பதால் டாஸ் ஜெயிச்ச ராஜஸ்தான் முதலில் பேட்டிங் ஆடியிருக்கலாம். ஆனால், பவுலிங் தேர்வு செய்து தோல்வி அடைந்துள்ளது.

Scroll to load tweet…