IPL 2023: வெடி வெடின்னு வெடித்த பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் - ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 198 ரன்கள் இலக்கு!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணி 198 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
 

Punjab Kings Scored 197 Runs Against Rajasthan Royals in 8th Match of IPL 2023 in Guwahati Barsapara Cricket Stadium

ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. 16ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடர் கடந்த 31 ஆம் தேதி தொடங்கப்பட்டது. 10 அணிகளும் ஒவ்வொரு போட்டியிலும் விளையாடி வெற்றி பெற்றன. இன்று கவுகாத்தியில் நடக்கும் 8ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. 

ராஜஸ்தான் ராயல்ஸ்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ஜேசன் ஹோல்டர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், கேஎம் ஆசிஃப், யுஸ்வேந்திர சாஹல்.

MCC Awards: தோனி, யுவராஜ் சிங், மிதாலி ராஜ், ரெய்னாவுக்கு எம்சிசியின் கௌரவ வாழ்நாள் உறுப்பினர்கள் அந்தஸ்து!

பஞ்சாப் கிங்ஸ்:

ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சா, ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், சாம் கரன், சிக்கந்தர் ராஸா, நேதன் எல்லிஸ், ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சாஹர் மற்றும் அர்ஷ்தீப் சிங்.

இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி முதலில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிராப்சிம்ரன் சிங் மற்றும் ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர். இதில், பிராப்சிம்ரன் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தார். இவர், 34 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் உள்பட 60 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த பானுகா ராஜபக்‌ஷா 1 ரன்னில் ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார்.

IPL 2023: பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தின் முதல் ஐபிஎல் போட்டி; மைதானத்தில் பிரம்மாண்டமாக நடந்த நடன நிகழ்ச்சி!

சிக்கந்தர் ராஸா (1), ஷாருக் கான் (11), ஜித்தேஷ் சர்மா (27) என்று ரன்கள் சேர்க்க, ஷிகர் தவான் அதிரடி சரவெடியாக ஆடி கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். அவர் 56 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் உள்பட 86 ரன்கள் (நாட் அவுட்) சேர்த்தார். ஷிகர் தவான் 36 பந்துகளில் தனது 50ஆவது அரை சதத்தை பூர்த்தி செய்தார். இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி விளையாடி வருகின்றனர். 

IPL 2023: எந்த மாற்றமும் இல்லாமல் கெத்தா, தெனாவட்டா களம் காணும் பஞ்சாப் - ஆர்ஆர் தான் டாஸ் வின்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios