IPL 2023: எந்த மாற்றமும் இல்லாமல் கெத்தா, தெனாவட்டா களம் காணும் பஞ்சாப் - ஆர்ஆர் தான் டாஸ் வின்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2023 தொடரின் 8ஆவது போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பீல்டிங் தேர்வு செய்துள்ளார்.
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. 16ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடர் கடந்த 31 ஆம் தேதி தொடங்கப்பட்டது. 10 அணிகளும் ஒவ்வொரு போட்டியிலும் விளையாடி வெற்றி பெற்றன. இன்று கவுகாத்தியில் நடக்கும் 8ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ஜேசன் ஹோல்டர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், கேஎம் ஆசிஃப், யுஸ்வேந்திர சாஹல்.
பஞ்சாப் கிங்ஸ்:
ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சா, ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், சாம் கரன், சிக்கந்தர் ராஸா, நேதன் எல்லிஸ், ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சாஹர் மற்றும் அர்ஷ்தீப் சிங்.
IPL 2023: இதெல்லாம் ஜூஜூபி ஸ்கோர்; 180, 190 அடித்தால் தான் டஃப் கொடுக்க முடியும்: டேவிட் வார்னர்!
இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதற்கு முன்னதாக இரு அணிகளும் நேருக்கு நேர் 24 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 போட்டியிலும், பஞ்சாப் கிங்ஸ் 10 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.
14 மணி நேரமாக போடப்பட்ட விராட் கோலியின் புதிய டாட்டூ ரகசியத்தை உடைத்த டாட்டூ கலைஞர்!
ஏற்கனவே இந்த தொடரில் நடந்த முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், அதே அணியுடன் களமிறங்குகிறது. அதே போன்று பஞ்சாப் கிங்ஸ் அணியும் வெற்றி பெற்ற நிலையில், அதே அணியுடன் களமிறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ரூ.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட இளம் ஆல் ரவுண்டர் ராஜ் அங்கத் பாவா தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக இளம் வீரர் குர்நூர் சிங் பிரார் அணியில் இடம் பெற்றுள்ளார். அவர் ரூ.20 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ஜானி பேர்ஸ்டோவ் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். லியம் லிவிங்ஸ்டன் விரைவில் அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் - சப்ஸ்டிடியூட்: துருவ் ஜுரெல், ஆகாஷ் வஷிஸ்ட், முருகன் அஷ்வின், குல்திப் யாதவ், டொனாவோன் பெர்ரேரா
பஞ்சாப் கிங்ஸ் - சப்ஸ்டிடியூட் - ரிஷி தவான், அதர்வா தைதே, ஹர்ப்ரீத் சிங் பாட்டியா, மேத்யூ ஷார்ட், மொகித் ரத்தீ