IPL 2023: காயம் காரணமாக விலகிய ரூ.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட பஞ்சாப் அணியின் இளம் வீரர் ராஜ் அங்கத் பவா!
காயம் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணியில் ரூ.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ராஜ் அங்கத் பவா அதிரடியாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழாவின் 16ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், நேற்று வரையில் 7 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. 2 போட்டிகளில் வெற்றி பெற்று குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி ஒரு போட்டியில் விளையாடி வெற்றி கண்டுள்ளது. இந்த நிலையில், பஞ்சாப் அணிய்ல் ரூ.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ராஜ் அங்கத் பவா காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்ட நிலையில், ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். கடந்த சீசன்களில் 2 போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடியுள்ளார். ஆனால், இந்த சீசனில் அவர் விளையாடவில்லை.
IPL 2023: இதெல்லாம் ஜூஜூபி ஸ்கோர்; 180, 190 அடித்தால் தான் டஃப் கொடுக்க முடியும்: டேவிட் வார்னர்!
கடந்த 2022 ஆம் ஆண்டு ஆண்கள் அணி அண்டர் 19 உலகக் கொப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ராஜ் அங்கத் பவா. இவர், இங்கிலாந்துக்கு எதிராக நடந்த அண்டர் 19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 54 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி உள்பட 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 189 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் ஆடிய இந்திய அணி அணி 195 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. இதன் காரணமாக ராஜ் அங்கத் பவா அணியில் ஏலம் எடுக்கப்பட்டார். எனினும், அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்ட நிலையில், தொடரிலிருந்து விலகியுள்ளார்.
14 மணி நேரமாக போடப்பட்ட விராட் கோலியின் புதிய டாட்டூ ரகசியத்தை உடைத்த டாட்டூ கலைஞர்!
இதற்கு முன்னதாக ஜானி பேர்ஸ்டோவ்வும் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். ஆனால், லியாம் லிவிங்ஸ்டன் விரைவில் அணியில் இடம் பெற உள்ளார். இந்த நிலையில் ராஜ் அங்கத் பவாவிற்குப் பதிலாக மற்றொரு இளம் வீரர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் 2022 ஆண்டு ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் அறிமுகமான ஆல்ரவுண்டரான குர்நூர் சிங் பிரார், 5 போட்டிகளில் விளையாடி 107 ரன்கள் எடுத்துள்ளார். அதோடு, 7 விக்கெட்டும் கைப்பற்றியிருக்கிறார் இவரை, பஞ்சாப் அணி ரூ.20 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
IPL 2023: மும்பைக்கு எதிராக சரவெடியாக வெடித்த விராட் கோலிக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பரிசு!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டக் ஒர்த் லீவி முறைப்படி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி கவுகாத்தியில் நடக்கிறது. இதுவரையில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 24 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 போட்டிகளிலும், பஞ்சாப் கிங்ஸ் 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.