IPL 2023: மும்பைக்கு எதிராக சரவெடியாக வெடித்த விராட் கோலிக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பரிசு!
மும்பைக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடிய விராட் கோலிக்கு ஆம்பியர் எலக்ட்ரிஃபையிங் பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருது வழங்கப்பட்டது.
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 31 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இதில் இடம் பெற்ற 10 அணிகளும் சிற்ப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி 2 போட்டியில் விளையாடி 2 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இன்னும் வெற்றியை பதிவு செய்யவில்லை.
IPL 2023: தனது அணி விளையாடும் போட்டியை கண்டு ரசித்த ரிஷப் பண்ட்!
கடந்த 2 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழந்து 171 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16.2 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 172 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.
இந்தப் போட்டியில் ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 49 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 82 ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். ஆர்சிபி அணியின் கேப்டன் பாப் டுபிளெசிஸ் 43 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள் உள்பட 73 ரன்கள் சேர்த்தார். ஆதலால், பாப் டூபிளெசி ஆட்டநாயகன் விருது பெற்றார். எனினும், தோனிக்கு ஆட்டநாயகன் விருது கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான் அவரது சிறப்பான ஆட்டத்தை பாராட்டும் வகையில் அவருக்கு புதிய எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
IPL 2023: ரஷீத் கான் வயிற்றில் இடித்த சர்ப்ஃராஸ் கான்; வேண்டுமென்றே நடந்ததா?
இந்த ஸ்கூட்டர், ஐபிஎல் 2023 சீசனுக்கு முன்னதாக, கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆர்சிபி-தீம் கொண்ட ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். ஆகையால், கோலிக்கு ஆம்பியர் எலக்ட்ரிஃபையிங் பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருது வழங்கப்பட்டது. க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரான, சஞ்சய் பெஹல் வரையறுக்கப்பட்ட பதிப்பு ஸ்டைலிஷ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பரிசாக அளித்துள்ளார்.
IPL 2023: வாக்கிங் ஸ்டிக் உதவியோடு காலை தூக்கிக் கொண்டு நடந்து சென்ற கேன் வில்லியம்சன்!
அதுமட்டுமின்றி இந்த போட்டிக்கு மட்டுமின்றி இனி வரும் ஆர்சிபி அணி ஆடும் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடும் ஒவ்வொரு வீரருக்கும் இந்த எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் பரிசாக வழங்கும் என்று க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ஆர்சிபி அணியின் பார்ட்னராகவும் இந்த அணி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் 6ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்கொள்கிறது. ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் போட்டியில் தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.