IPL 2023: இனிமேலும் பென் ஸ்டோக்ஸை நம்ப கூடாது: அடுத்த கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் தான் - ஸ்ரீசாந்த்!

இனிமேலும், பென் ஸ்டோக்ஸை நம்பக் கூடாது என்றும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த கேப்டனாக இருப்பதற்கு ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு தான் முழு தகுதியும் இருக்கும் என்று முன்னாள் வீரர் ஸ்ரீ சாந்த் கூறியுள்ளார்.
 

After MS Dhoni Chennai Super Kings Next Captain May Ruturaj Gaikwad Said S Sreesanth

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐபிஎல் 2023 ஆம் ஆண்டிற்கான 16ஆவது சீசன் மிகவும் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த சீசனில், இடம் பெற்றுள்ள 10 அணிகளுமே சிறப்பாக விளையாடி வருகின்றன. இதுவரையில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மட்டும் இன்னும் வெற்றி கணக்கை தொடங்கவில்லை. கடந்த 3 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய சிஎஸ்கே அணி ருத்துராஜ் கெய்க்வாட், தோனி, ராயுடு, கான்வே ஆகியோரது அதிரடி ஆட்டத்தால் 217 ரன்கள் குவித்தது.

IPL 2023: ரஷீத் கான் வயிற்றில் இடித்த சர்ப்ஃராஸ் கான்; வேண்டுமென்றே நடந்ததா?

பின்னர் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதையடுத்து, ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு பலரும் பாராட்டும், வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர். இந்தப் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி மற்றும் சான்ட்னர் சிறப்பாக பந்து வீசி வெற்றி தேடிக் கொடுத்தனர். இவர்கள், சிறப்பாக பந்து வீசவில்லை என்றால் இந்தப் போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை கண்டிருக்கும்.

IPL 2023: வாக்கிங் ஸ்டிக் உதவியோடு காலை தூக்கிக் கொண்டு நடந்து சென்ற கேன் வில்லியம்சன்!

இந்த நிலையில், ருத்துராஜ் கெய்க்வாட் குறித்து முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீசாந்த் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: தோனிக்குப் பிறகு சிஎஸ்கே அணியை வழிநடத்துவதற்கு சரியான ஒருவர் ருத்துராஜ் கெய்க்வாட் தான். பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி வரும், அடுத்தடுத்த லெவலுக்கு சென்று கொண்டிருக்கிறார். அவரிடம் தனித்துவம் இருக்கிறது. அதுமட்டுமின்றி அவரிடம் தலைமைப் பண்பும் இருக்கிறது. சிஎஸ்கே அணியில் 3 வருடங்களுக்கு மேலாக விளையாடி வரும் ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு சென்னை அணியின் தேவை என்ன என்பது நன்கு தெரியும்.

IPL 2023: தோனி ஓய்வு பெற்றதால் தான் ரிஷப் பண்ட் கிடைத்தார் - கங்குலி!

தான் மட்டுமின்றி சக வீரர்களையும் வழிநடத்தும் அளவிற்கு தன்னை மாற்றி வருகிறார். ஆகையால், எதிர்காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறப்பான ஒரு கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் இருப்பார். ஆனால், பென் ஸ்டோக்ஸால் இதெல்லாம் சாத்தியமில்லை என்று கூறியுள்ளார்.

IPL 2023: டெல்லி அணிக்காக காயத்தையும் பொருட்படுத்தாமல் ஆதரவு தர வரும் ரிஷப் பண்ட்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios