IPL 2023: தோனி ஓய்வு பெற்றதால் தான் ரிஷப் பண்ட் கிடைத்தார் - கங்குலி!
டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகரான சவுரவ் கங்குலி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ரிஷப் பண்ட் இருவரையும் ஒப்பிட்டு பேசியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரிஷப் பண்ட் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய நிலையில் அவருக்குப் பதிலாக டெல்லி டேபில்ஸ் அணிக்கு டேவிட் வார்னர் கேப்டனாக விளையாடி வருகிறார். ஏற்கனவே லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
IPL 2023: டெல்லி அணிக்காக காயத்தையும் பொருட்படுத்தாமல் ஆதரவு தர வரும் ரிஷப் பண்ட்!
ரிஷப் பண்ட் இல்லாதது டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. டெல்லி அணியின் விக்கெட் கீப்பரான சர்ப்ராஸ் கானின் கீப்பிங் பணி பெரிதாக ஒன்றும் இல்லை. இந்த நிலையில், இது குறித்து பேசிய டெல்லி அணியின் ஆலோசகர் சவுரங் கங்குலி கூறியிருப்பதாவது: சர்ப்ராஸ் கான் கீப்பிங்கை விட பேட்டிங்கில் ஹான் கவனம் செலுத்த வேண்டும். உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக இந்த சீசனில் கீப்பிங் செய்தார். ஆனால், அதை விட ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாட வேண்டும். ஒன்றிரண்டு போட்டிகளை மட்டும் வைத்துக் கொண்டு யார் குறித்தும் தவறாக முடிவு செய்துவிடக் கூடாது.
IPL 2023: குஜராத் டைட்டன்ஸ் உடன் டெல்லி கேபிடல்ஸ் பலப்பரீட்சை: போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பு!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெற்றதால் தான் ரிஷப் பண்ட் அணியில் இடம் பெற்று அவரது பணியை மேற்கொண்டார். அதே போன்று அவர் இல்லாத இந்த இக்கட்டான சூழலில் இளம் விக்கெட் கீப்பர்களை அடையாளம் காண வேண்டும். அதுவரை ரசிகர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்று சௌரவ் கங்குலி கூறியுள்ளார்.