IPL 2023: நோபால், வைடு வீசிக்கிட்டே இருந்தால் வேற கேப்டன் கீழ் தான் விளையாடனும்: வார்னிங் கொடுத்த தோனி!
பந்து வீச்சாளர்கள் நோபால், வைடு வீசுவதை கட்டுப்படுத்தாவிட்டால் வேற கேப்டன் தலைமையின் கீழ் தான் விளையாட நேரிடும் என்று தனக்கே உரிய பாணியில் எச்சரித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் 16ஆவது சீசன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த 6ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளும் மோதின. இதில், முதலில் ஆடிய சிஎஸ்கே அணியில் ருத்துராஜ் கெய்க்வாட் 57, டெவான் கான்வே 47, ஷிவம் துபே 27, ராயுடு 27 (நாட் அவுட்), மொயீன் அலி 19, எம் எஸ் தோனி 12 ரன்கள் என்று வரிசையாக ஒவ்வொருவரும் ரன்கள் சேர்த்தனர். இதன் மூலம், 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது.
பின்னர், கடின இலக்கை துரத்திய லக்னோ அணி அதிரடியாகவே ஆடியது ஒரு கட்டத்தில் ஜெயித்துவிடும் என்று கூட எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டை கைப்பற்றவே லக்னோ அணி தடுமாறியது. லக்னோ அணியில் கேஎல் ராகுல் 20, கைல் மேயர்ஸ் 53, நிக்கோலஸ் பூரன் 32, ஆயுஷ் பதானி 23, கிருஷ்ணப்பா கவுதம் 17 என்று ரன்கள் சேர்த்தனர். இறுதியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
IPL 2023: சிஎஸ்கே ஜெயிக்க காரணமே தோனி அடிச்ச அந்த 2 சிக்ஸர் தான்!
ஆனால், இந்தப் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ரன்கள் வாரி வழங்கினர். அளவுக்கு அதிகமாக நோபால், வைடு என்று வீசிக் கொண்டே இருந்தனர். வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே 13 வைடு வீசியுள்ளனர். இதில், இம்ப்கேட் பிளேயரான துஷார் தேஷ்பாண்டே மட்டும் 4 வைடும், 3 நோபாலும் போட்டுள்ளார். இதையடுத்து, பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் தோனி கூறியிருப்பதாவது: பந்து வீச்சாளர்கள் அதிகமாகவே நோபால் மற்றும் வைடும் வீசினர். நோபால் வீசுவதை கட்டுப்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி வேகப்பந்து வீச்சாளார்கள் பந்து வீசும் தரத்தை இன்னும் உயர்த்த வேண்டும். மைதானம், போட்டியின் தன்மைக்கு ஏற்ப பந்து வீசுவதை கற்றுக் கொள்ள வேண்டும்.
நோபால் மற்றும் வைடு வீசுவதை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் வேறொரு கேப்டனின் தலைமையின் கீழ் தான் விளையாட நேரிடும் என்று தோனி தனக்கே உரிய பாணியில் எச்சரித்துள்ளார்.