Asianet News TamilAsianet News Tamil

IPL 2023: சிஎஸ்கே ஜெயிக்க காரணமே தோனி அடிச்ச அந்த 2 சிக்ஸர் தான்!

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி அடித்த 2 சிக்ஸரால் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
 

MS Dhoni Final 2 sixes are the main reason to CSK won against LSG in Chepauk Stadium IPL 2023
Author
First Published Apr 4, 2023, 9:35 AM IST

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான போட்டி நடந்தது. இதில், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தது. பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசி வான வேடிக்கை காட்டியது. ருத்துராஜ் கெய்க்வாட் 57, டெவான் கான்வே 47, ஷிவம் துபே 27, ராயுடு 27 (நாட் அவுட்), மொயீன் அலி 19 என்று வரிசையாக ஒவ்வொருவரும் ரன்கள் சேர்த்தனர். கடைசியாக சிஎஸ்கே அணியின் கேப்டன் எம் எஸ் தோனி 19.2ஆவது ஓவரில் களமிறங்கினார்.

IPL 2023: சேப்பாக்கம் கோட்டையில் 1426 நாளுக்கு பிறகு அடுத்தடுத்து சிக்ஸர்: 5000 ரன்களை கடந்து தோனி சாதனை!

அந்த ஓவரை மார்க் வுட் வீசினார். அவர், வந்த 2ஆவது பந்திலும் சிக்ஸர் அடிக்க, 3ஆவது பந்திலும் சிக்ஸர் விளாசினார். ஆனால், 4ஆவந்து பந்தையும் சிக்ஸர் அடிக்க முயற்சிக்க, கேட்சானார். அதன் பிறகு கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. இறுதியாக, 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. ஆனால், இந்த ஸ்கோர் லக்னோ அணியால் அடிக்க கூடிய ஸ்கோர் தான். ஏனென்றால், லக்னோ அணியில் பேட்டிங் வரிசை சிறப்பாக இருக்கிறது. கைல் மேயர்ஸ், கேஎல் ராகுல், குர்ணல் பாண்டியா, ஸ்டோய்னிஸ், நிக்கோலஸ் பூரன் என்று வரிசையாக பேட்டிங் ஆர்டர் இருக்கிறது.

IPL 2023: பவர்பிளேயில் பின்னி பெடலெடுத்து ருத்துராஜ் கெய்க்வாட் - புதிய ரெக்கார்ட் படைத்த சிஎஸ்கே!

இதில், மேயர்ஸ் மற்றும் ராகுல் ஓரளவு நல்ல தொடக்கம் கொடுத்த நிலையில், ஸ்டாய்னிஸ் மற்றும் குர்ணல் பாண்டியா இருவரும் ஸ்பின்னர்ஸை எதிர்கொண்ட விதம் சொதப்பிய நிலையில் இருவரும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதில் தீபக் ஹூடா வேறு. ஏன், இருக்கிறோம் எதற்காக இருக்கிறோம் என்று தெரியாமல் கூட விளையாடி வருகிறார். முதல் போட்டியில் சிக்ஸர் விளாசிய ஆயுஷ் பதானி இந்தப் போட்டியில் சிக்ஸரும், பவுண்டரியும் அடித்திருந்தால் கூட லக்னோ ஜெயிக்க வாய்ப்பிருந்திருக்கும். அவருக்கு உறுதுணையாக கவுதம் விளையாடியிருக்கலாம்.

IPL 2023: பவர்பிளேயில் பின்னி பெடலெடுத்து ருத்துராஜ் கெய்க்வாட் - புதிய ரெக்கார்ட் படைத்த சிஎஸ்கே!

ஆனால், கடைசில வந்த மார்க் வுட் தன்னால் முடிந்த பவுண்டரியும், சிக்ஸரும் விளாசி ஆச்சரியமளித்தார். பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் பலம் வாய்ந்த அணி மட்டுமின்றி 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணியை இவ்வளவு தூரம் விரட்டி வந்து கடைசி 12 ரன்களில் தோல்வியடைந்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த 12 ரன், கடைசி ஓவரில் களமிறங்கிய தோனி அடித்த 2 சிக்ஸரால் தான் சென்னை சூப்பர் கிங்ஸால் வெற்றி பெற முடிந்தது.

இந்தப் போட்டியைத் தொடர்ந்து மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் வரும் மே 04 ஆம் தேதி லக்னோவில் நடக்கும் 46ஆவது போட்டியில் மோதுகின்றன. 

IPL 2023: மன வேதனையுடன் காயத்தோடு நாடு திரும்பிய கேன் வில்லியம்சன் - குஜராத் டைட்டன்ஸ் பதிவிட்ட வீடியோ!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios