IPL 2023: பழிக்கு பழி, வெற்றிக்கு வெற்றி; கடந்த சீசனில் அடைந்த அவமானத்திற்கு பிராய்ச்சித்தம் தேடிய சிஎஸ்கே!
கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியிடம் அடைந்த தோல்விக்கு இந்த 16ஆவது சீசனில் நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பழி தீர்த்துக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதில், ஆண்டு தோறும் ஏதாவது ஒரு வகையில் புதுப்புது மாற்றங்கள் செய்யப்பட்டுதான் வருகிறது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட 15ஆவது ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் என்று இரு அணிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த சீசனின் போது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் நடந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
IPL 2023: சிஎஸ்கே ஜெயிக்க காரணமே தோனி அடிச்ச அந்த 2 சிக்ஸர் தான்!
மும்பையில் நடந்த போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி 210 ரன்கள் எடுத்தது. பின்னர், ஆடிய லக்னோ அணி 211 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பிறகு இரு அணிகளுக்கு இடையில் எந்தப் போட்டியும் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான அடுத்த போட்டி இந்த 2023 ஆம் ஆண்டு 16ஆவது சீசனில் நடந்தது. இந்த 16ஆவது சீசனுக்கான 6ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில், முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது.
கடின இலக்கை துரத்திய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி கிட்டத்தட்ட வெற்றி இலக்கை நெருங்கி வந்த நிலையில், கடைசியாக 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சீசனில் அடைந்த அவமானத்திற்கு இந்த சீசனில் பிராய்ச்சித்தம் தேடிக் கொண்டுள்ளது. எனினும், இரு அணிகளுக்கு இடையிலான 46ஆவது அடுத்த போட்டி வரும் மே 04 ஆம் தேதி லக்னோ மைதானத்தில் நடக்கிறது. லக்னோவின் ஹோம் மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் லக்னோ அணி கண்டிப்பாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காரணம், என்னவென்றால், இதுவரையில் ஹோம் மைதானங்களில் நடந்த போட்டிகளில் அந்தந்த அணிகள் தான் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
IPL 2023: பவர்பிளேயில் பின்னி பெடலெடுத்து ருத்துராஜ் கெய்க்வாட் - புதிய ரெக்கார்ட் படைத்த சிஎஸ்கே!