IPL 2023: குஜராத் டைட்டன்ஸ் உடன் டெல்லி கேபிடல்ஸ் பலப்பரீட்சை: போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பு!
இன்று டெல்லியில் நடக்கும் டெல்லி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. 16ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடர் கடந்த 31 ஆம் தேதி தொடங்கப்பட்டது. 10 அணிகளும் ஒவ்வொரு போட்டியிலும் விளையாடி வெற்றி பெற்றன. இதில், ஒரு சில அணிகள் தோல்வியை தழுவியது. ஏற்கனவே டெல்லி கேபிடல்ஸ் அணி தனது முதல் போட்டியில் தோல்வியை கண்ட நிலையில், 2ஆவது போட்டி இன்று டெல்லியில் நடக்கிறது. டெல்லியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
ஆனால், இந்தப் போட்டியின் போது மழை குறுக்கீடு இருக்கும் என்று கூறப்படுகிறது. டெல்லியில் கடந்த சில நாட்களாக மழை பெயது வரும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம், இன்று டெல்லியில் மிதமான மழை முதல் இடியுடன் கூடிய கனமழகை பெய்யக் கூடும் என்று தெரிவித்துள்ளது. வார இறுதியில் 4-5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று கணித்துள்ளது.
வானிலை அறிக்கையின்படி, பகலில், பொதுவாக வானம் தெளிவாக இருக்கும். புகை மற்றும் மூடுபனியின் பரவலான பகுதிகளை எதிர்பார்க்கலாம், சில நேரங்களில் தெரிவு நிலையை குறைக்கலாம். அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் உள்ளது, எனினும், மழை பெய்ய 5 சதவிகித வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், மாலை நேரத்தில் வெப்பநிலை 19 டிகிரிக்கும் குறைவாக இருக்கும். மேலும், 10 முதல் 15 கிமீ வேகத்த்ல் காற்று வீசக் கூடும். மழை பெய்ய 10 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது.
IPL 2023: சிஎஸ்கே ஜெயிக்க காரணமே தோனி அடிச்ச அந்த 2 சிக்ஸர் தான்!
டெல்லியின் அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கும் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடும் அணி 170 ரன்கள் வரையில் அடிப்பதற்கு வாய்ப்பு உண்டு. சுழற்பந்து வீச்சாளர்கள் இந்த மைதானத்தில் ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது மழை குறுக்கீடு இருந்த நிலையில், டக் ஒர்த் லீவிஸ் முறைப்பட்டி பஞ்சாப் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.