IPL 2023: தனது அணி விளையாடும் போட்டியை கண்டு ரசித்த ரிஷப் பண்ட்!
டெல்லி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையில் நேற்று டெல்லியில் நடந்த போட்டியை ரிஷப் பண்ட் நேரில் வந்து கண்டு ரசித்துள்ளார்.
ஐபிஎல் 2023 தொடர் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 10 அணிகளுமே ஒவ்வொரு போட்டியில் விளையாடியுள்ளன. இதில் ஒரு சில அணிகள் முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளன. அதில், டெல்லி கேபிடல்ஸ் அணியும் ஒன்று. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இதைத் தொடர்ந்த டெல்லியில் நேற்று நடந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மோதியது.
இதில், முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 18.1 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 2 வெற்றிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
IPL 2023: ரஷீத் கான் வயிற்றில் இடித்த சர்ப்ஃராஸ் கான்; வேண்டுமென்றே நடந்ததா?
விளையாடிய 2 போட்டிகளிலும் டெல்லி கேபிடல்ஸ் 2 போட்டியிலும் தோல்வியை தழுவியது. கார் விபத்து காயம் காரணமாக ஐபிஎல் தொடைரிலிருந்து விலகிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விலகினார். இதன் காரணமாக அவருக்குப் பதிலாக டேவிட் வார்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும், முதல் போட்டியின் போது அவரது ஜெர்சியை வீரர்கள் அமர்ந்திருக்கும் போர்டில் வைத்திருந்தனர். அந்தப் போட்டிக்கு அவர் வரவில்லை. டெல்லியில் நடக்கும் போட்டியில் ரிஷப் பண்ட் இடம் பெறுவார் என்று டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்க இணை செயலாளர் ராஜன் மஞ்சந்தா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், டெல்லி போட்டியை காண்பதற்கு ரிஷப் பண்ட் வந்திருந்தார். அவரை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வரவேற்றார். அவருடன் அமர்ந்து ரிஷப் பண்ட், டெல்லி, குஜராத் போட்டியை கண்டு ரசித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
IPL 2023: வாக்கிங் ஸ்டிக் உதவியோடு காலை தூக்கிக் கொண்டு நடந்து சென்ற கேன் வில்லியம்சன்!