14 மணி நேரமாக போடப்பட்ட விராட் கோலியின் புதிய டாட்டூ ரகசியத்தை உடைத்த டாட்டூ கலைஞர்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடைசியா போட்ட புதிய டாட்டூவிற்குள் மறைந்திருக்கும் ரகசியத்தை டாட்டூ கலைஞர் வெளியிட்டுள்ளார்.
விளையாட்டுக்கு மிகவும் முக்கியம் உடல் ஃபிட். விளையாட்டு பிரபலங்கள் பலரும் தங்களது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள விரும்புவார்கள். அப்படி ஃபிட்டாக வைத்திருப்பவர்களில் ஒருசிலர் டாட்டூ போட்டுக் கொள்ள விரும்புவார்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல், உமேஷ் யாதவ், பென் ஸ்டோக்ஸ் என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடங்குவதற்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி புதிதாக தனது வலது கையில் டாட்டூ போட்டுக் கொண்டார். ஆனால், அதற்கான விளக்கம் இதுவரையில் தெரியாமல் இருந்தது.
IPL 2023: மும்பைக்கு எதிராக சரவெடியாக வெடித்த விராட் கோலிக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பரிசு!
இந்த நிலையில், தான் அதற்கான விளக்கம் குறித்து டாட்டூ கலைஞர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: விராட் கோலியின் புதிய டாட்டூவை போட்டு முடிப்பதற்கு கிட்டத்தட்ட 14 மணிநேரமானதாக சன்னி பானுஷாலி கூறியுள்ளார். இது குறித்து விராட் கோலிக்கு டாட்டூ போட்ட சன்னி பானுஷாலி கூறியிருப்பதாவது: புதிய டாட்டூ டிசைன்களுடன் விராட் கோலி என்னை வந்து சந்தித்தார். அவரது அடுத்த டாட்டூவில் எனது பணி இருக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால், அதன் பிறகு அவரது பிஸியான நேரங்களினால், அவரால் டாட்டூ போட்டுக் கொள்ள முடியவில்லை.
IPL 2023: தனது அணி விளையாடும் போட்டியை கண்டு ரசித்த ரிஷப் பண்ட்!
விராட் கோலியின் டாட்டூவானது ஆன்மீகத்தின் மீதான சாயலில் இருந்தது. அந்த ஆன்மீக ரீதியிலான டாட்டூவை போடுவதற்கு நாங்கள் கவனமாகவும்ம் கடினமாகவும் பணியாற்ற வேண்டியிருந்தது. விராட் கோலி போட்டுள்ள புதிய டாட்டூ போடுவதற்கு மட்டும் கிட்டத்தட்ட 14 மணி நேரம் ஆனது. பாதுகாப்புடன் தான் விராட் கோலிக்கு டாட்டூவை போட்டோம். புதிய டாட்டூ போட்ட பிறகு அதனை விராட் கோலி ஆச்சரியத்துடன் பார்த்தார். மேலும், நன்றாக இருப்பதாக கூறினார். இந்த புதிய டாட்டூ தனது வாழ்நாள் முழுவதும் தன்னுடன் இருக்கும். இது ஆன்மீக பயணத்தின் சின்னம் என்று விராட் கோலி கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.