ஜோஃப்ரா ஆர்ச்சர் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ்: மொஹாலியில் வான வேடிக்கை காட்டிய பஞ்சாப் 214 ரன்கள் குவிப்பு!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்துள்ளது.

PBKS Scored 214 Runs Against MI at Mohali in 46th IPL Match

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 46ஆவது ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முதலில் தனது நண்பரான ஷிகர் தவானிடம் என்ன செய்யவது என்று கேட்டார். அதற்கு அவரோ பவுலிங் என்று சொல்லவே, ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்தார். இது ரோகித் சர்மாவின் 200ஆவது ஐபிஎல் போட்டியாகும்.

மாற்றான் ஒற்றிப் பிறந்த இரட்டையர்கள் போன்று போஸ் கொடுத்த ரோகித் சர்மா - ஷிகர் தவான்!

இதையடுத்து எப்போதும் ஷிகர் தவான் கேட்ச் பிடிக்கும் போது போ பஞ்சாப் ஸ்டைலில் போஸ் கொடுப்பார் அல்லவா, அதே போன்று ஷிகர் தவான் உடன் இணைந்து அதே போஸ் கொடுத்தார். இதனை பார்க்கும் போது மாற்றான் படத்தில் வரும் சூர்யாவைப் போன்று ஒற்றிப் பிறந்த இரட்டையர்கள் போன்று இருவரும் போஸ் கொடுத்துள்ளனர். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் வரலாற்றில் 2ஆவது முறையாக ரத்தான போட்டி: இரு அணிகளுக்கும் புள்ளி; ரசிகர்கள் ஏமாற்றம்!

மும்பை பவுலிங் தேர்வு செய்ததைத் தொடர்ந்து முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிராப்சிம்ரன் சிங் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் 30 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த மேத்யூ வேட் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் ஜித்தேஷ் சர்மா இருவரும் இணைந்து பஞ்சாப் அணிக்கு ரன்கள் சேர்த்து வருத்தனர். 4ஆவது விக்கெட்டுக்கு 53 பந்துகளில் 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்து நல்ல ஸ்கோர் அடித்துக் கொடுத்தனர்.

ஷிகர் தவானிடம் கேட்டு முடிவு செய்த ஹிட்மேன்; 200ஆவது ஐபிஎல் போட்டியில் ரோகித் சர்மா; MI பீல்டிங் தேர்வு!

ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் பறக்க விட்ட லியாம் லிவிங்ஸ்டன் 42 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார். இதில் 4 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும். இதே போன்று ஜித்தேஷ் சர்மா 27 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள் உள்பட 49 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்த வரையில் பந்து வீச்சில் பியூஷ் சாவ்லா 2 விக்கெட்டும், அர்ஷாத் கான் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

ஓ, இது தான் என்னுடைய கடைசி சீசன் என்று முடிவு பண்ணிட்டீங்களா? தோனி கேள்வி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios