ஐபிஎல் வரலாற்றில் 2ஆவது முறையாக ரத்தான போட்டி: இரு அணிகளுக்கும் புள்ளி; ரசிகர்கள் ஏமாற்றம்!
சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக ரத்தானதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 45ஆவது போட்டி நடந்தது. இதில் டாஸ் வென்ற சென்னை முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
ஏற்கனவே மழை காரணமாக போட்டி 15 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. கேஎல் ராகுல் இல்லாத நிலையில், அவருக்குப் பதிலா குர்ணல் பாண்டியா கேப்டனாக செயல்பட்டார். மனன் வோஹ்ரா மற்றும் கைல் மேயர்ஸ் இருவரும் களமிறங்கினர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
முதலில் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீசினர். அதில் பவுண்டரிகள் அடிக்கப்பட்ட நிலையில், ஸ்பின்னர்களை அழைத்தார். அதன்படி மொயீன் அலி பந்து வீசினார். அவரது 3.4ஆவது ஓவரில் கைல் மேயர்ஸ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து மகீஷ் தீக்ஷனா வரவழைக்கப்பட்டார். அவர் வீசிய 5.4ஆவது ஓவரில் தொடக்க வீரர் மனன் வோஹ்ரா கிளீன் போல்டானார். இவர் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
இவரைத் தொடர்ந்து லக்னோ அணியின் கேப்டன் குர்ணல் பாண்டியா களமிறங்கினார். இவர், வந்த வேகத்தில் கோல்டன் டக் முறையில் தீக்ஷனா பந்தில் ஸ்லிப்பில் நின்றிருந்த அஜிங்கியா ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
அடுத்து வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், அவர் ஆட்டமிழந்ததற்கு அவர் கொடுத்த ரியாக்ஷன் ரசிகர்களை வியக்க வைத்தது. அடுத்து நிக்கோலஸ் பூரன் மற்றும் ஆயுஷ் பதோனி இருவரும் இணைந்து ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் நிக்கோலஸ் பூரன் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
இதையடுத்து தனது அதிரடியை காட்டிய பதோனி 4 சிக்ஸர்கள் அடித்து தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். லக்னோ அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கீடு இருந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. அதன் பிறகு மழை நின்றது. இதையடுத்து, மீண்டும் போட்டி தொடங்க இருந்த நிலையில், மீண்டும் மழை பெய்தது. அப்போது லக்னோ அணியின் பீல்டிங் பயிற்சியாளார் ஜான் டி ரோட்ஸ் மைதான ஊழியர்களுக்கு உதவியாக அவர்களுடன் இணைந்து தார்ப்பாய் கொண்டு மைதானத்தை மூடும் பணியில் ஈடுபட்டார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
இரவு, 7 மணி வரையில் மழை பெய்த நிலையில், போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலமாக ஐபிஎல் வரலாற்றில் 2ஆவது முறையாக போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
இதற்கு முன்னதாக கடந்த 2011 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. போட்டி ரத்து செய்யப்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. தோனிக்காக ஒவ்வொரு போட்டிக்கும் அதிகளவில் ரசிகர்கள் வரும் நிலையில், தோனியை பார்த்த சந்தோஷத்தில் ரசிகர்கள் திரும்பிச் சென்றனர்.