ஷிகர் தவானிடம் கேட்டு முடிவு செய்த ஹிட்மேன்; 200ஆவது ஐபிஎல் போட்டியில் ரோகித் சர்மா; MI பீல்டிங் தேர்வு!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சு தேர்வு செய்தார்.

MI Won the toss and Choose to Bowl First against PBKS in 46th IPL Match at Mohali

மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 46ஆவது ஐபிஎல் போட்டி மொஹாலியில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவானிடம் என்ன தேர்வு செய்வது என்று ஆலோசித்து பந்து வீச்சு தேர்வு செய்தார். இந்தப் போட்டியின் மூலமாக ரோகித் சர்மா தனது 200ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறார். 9 போட்டிகளில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 5ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது. ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி 8ல் விளையாடி 4ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்து 8ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் 7ஆவது இடம் பிடிக்கும்.

லக்னோ மீண்டும் பேட்டிங் இல்லையா? 4 பந்துகள் இருக்கும் போது மழை: சென்னைக்கு இலக்கு என்ன?

மும்பை இந்தியன்ஸ்:

ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷான், கேமரூன் க்ரீன், திலக் வர்மா, டிம் டேவிட், நேஹல் வதேரா, ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால், அர்ஷத் கான்.

பஞ்சாப் கிங்ஸ்:

ப்ராப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் (கேப்டன்), மேத்யூ ஷார்ட், லியாம் லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சாம் கரண், ஷாருக் கான், ஹர்ப்ரீத் ப்ரார், ரிஷி தவான், ராகுல் சகார், அர்ஷ்தீப் சிங்.

விட்டு விட்டு மழை: போட்டி நிறுத்தம்; சென்னை பேட்டிங் ஆடுமா?

இதுவரையில் விளையாடிய 30 போட்டிகளில் இரு அணிகளும் தலா 15 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 223 ரன்கள், குறைந்தபட்ச ஸ்கோர் 87 ரன்கள். இதே போன்று பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 230 ரன்கள், குறைந்தபட்ச ஸ்கோர் 119 ரன்கள் ஆகும்.

சாதனை படைக்க காத்திருக்கும் வீரர்கள்:

இந்தப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் 6 சிக்ஸர்கள் அடித்தால் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 100 சிக்ஸர்கல் அடித்தவர்களின் பட்டியலில் இணைவார்.

இதே போன்று ஷிகர் தவான் இன்னும் ஒரு அரைசதம் அடித்தால் ஐபிஎல் கிரிக்கெட்டில் 50 அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார். அதுமட்டுமின்றி இன்னும் 3 கேட்சுகள் பிடித்தால் 100 கேட்சுகள் பிடித்த வீரர் என்ற சாதனையையும் படைப்பார்.

இந்தப் போட்டியில் பியூஷ் சாவ்லா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினால் ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களின் பட்டியலில் முதல் 3 இடங்களில் ஒருவராக வருவார்.

ஜோஃப்ரா ஆர்ச்சர் இன்னும் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினால் ஐபிஎல் தொடரில் 50 விக்கெட்டுகள் எடுத்தவர்களின் பட்டியலில் இணைவார்.
 

ஓ, இது தான் என்னுடைய கடைசி சீசன் என்று முடிவு பண்ணிட்டீங்களா? தோனி கேள்வி!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios