ஓ, இது தான் என்னுடைய கடைசி சீசன் என்று முடிவு பண்ணிட்டீங்களா? தோனி கேள்வி!

சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது டாஸில் வெற்றி பெற்ற தோனியிடம், டேனி மோரிஷன், உங்களுடைய இந்த கடைசி சீசனை எப்படி அனுபவிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்

CSK Skipper MS Dhoni Asking Danny Morrison You have decided it will be my last IPL

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி தனது கடைசி ஐபிஎல் சீசனை எதிர்நோக்கி விளையாடிக் கொண்டிருக்கிறார். கிரிக்கெட் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரையில் அவர் எப்போது ஓய்வு பெறுவார்? என்பது தான் கேள்வியாக உள்ளது. ஆனால், ரசிகர்களைப் பொறுத்த வரையில் தோனி ஒவ்வொரு சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பது தான்.

கேஎல் ராகுல் இல்லாமல் களமிறங்கும் LSG: சென்னை தோல்விக்கு பதிலடி கொடுக்குமா லக்னோ? சென்னைக்கு சாதகமான டாஸ்!

இதுவரையில் 233 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள எம்.எஸ்.தோனி, 5052 ரன்கள் வரையில் குவித்துள்ளார். இதில், அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்துள்ளார். இதுவரையில் 348 பவுண்டரிகளும், 237 சிக்ஸர்களும் விளாசியுள்ளார். சமீபத்தில் சென்னை அணிக்காக ஒரு கேப்டனாக தனது 200ஆவது போட்டியில் விளையாடினார். இதுவரையில் 9 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்துள்ளது.

தந்தையின் நினைவாக புதிய பள்ளிக்கூடம்: 2300 குழந்தைகளுக்கு இலவச கல்வி

தற்போது லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 45ஆவது போட்டி நடக்கிறது. இதில், காயம் காரணமாக லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக குர்ணல் பாண்டியா கேப்டனாக செயல்பட்டார். டாஸ் போடுவதற்கும் தோனி உடன் இணைந்து வந்தார். அப்போது டாஸ் ஜெயித்த தோனி பந்து வீச்சு தேர்வு செய்தார். அவரிடம், உங்களுடைய இந்த கடைசி சீசனை எப்படி அனுபவிக்கிறீர்கள் என்று கிரிக்கெட் வர்ணனையாளர் டேனி மோரிசன் கேள்வி எழுப்பினார்.

தோள்பட்டை காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய லக்னோ வீரர்; சிக்கலில் இந்தியா டெஸ்ட் டீம்!

அதற்கு தோனியோ, இது என்னுடைய கடைசி ஐபிஎல் என்று நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள் என்று கேட்கவே, அதற்கு டேனி மோரிசன் நான் அல்ல என்று பதில் அளித்தார். அதோடு நிற்காமல் ரசிகர்களையும் பார்த்தவாறு, அவர் மீண்டும் அடுத்த ஆண்டுக்கு வருகிறார், அவர் மீண்டும் அடுத்த ஆண்டுக்கு விளையாட வருகிறார் என்று கூறியுள்ளார். இதற்கு தோனி மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

ஒற்றை காலால் உடற்பயிற்சி செய்யும் கேன் வில்லியம்சன் குணமடைய விராட் கோலி வாழ்த்து!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios