தோள்பட்டை காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய லக்னோ வீரர்; சிக்கலில் இந்தியா டெஸ்ட் டீம்!

தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட் மீதமுள்ள ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

LSG Player Jaydev Unadkat ruled out of IPL 2023 due to left shoulder injury

ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் ஒன்று. இந்த அணியில் குஜராத் மாநிலம் போர்பந்தரைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட்டும் ரூ.50 லட்சத்திற்கு இடம் பெற்றிருந்தார். டெல்லிக்கு எதிராக நடந்த முதல் போட்டியில் இடம் பிடித்து 3 ஓவர்கள் வீசி 39 ரன்கள் விட்டுக் கொடுத்தார். விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை. இதே போன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 3 ஓவர்கள் வீசி 26 ரன்கள் விட்டுக் கொடுத்தார். விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை.

சென்னையை பழிதீர்க்குமா கேஎல் ராகுல் அண்ட் டீம்? ரெக்கார்டு என்ன சொல்கிறது?

இதையடுத்து, பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 2  ஓவர்கள் வீசி 27 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இந்தப் போட்டியில் அவர் விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை. அதன் பிறகு எந்த போட்டியிலும் அவர் இடம் பெறவில்லை. மொத்தமாக 3 போட்டிகளில் விளையாடி 8 ஓவர்கள் வீசி 92 ரன்கள் குவித்துள்ளார். ஒரேயொரு போட்டியில் பேட்டிங்கும் ஆடியிருக்கிறார். இந்தப் போட்டியில் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்கள் குவித்துள்ளார்.

WTC Final: அடுத்தடுத்து காயமடைந்த பந்து வீச்சாளர்கள்; சிக்கலில் இந்திய அணி!

இந்த நிலையில், நேற்றுமுன் தினம் நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் அவர் வலை பயிற்சியில் பவுலிங் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் அவரது இடது தோள்பட்டை பகுதியில் பலத்த காயமடைந்தது. இதையடுத்து மருத்துவரது உதவியுடன் தோள்பட்டையில் ஐஸ்பேக் வைத்தபடி அங்கிருந்து சென்றார். அதன்பிறகு அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, அவர் இந்த தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.

எமனாக வந்த கிரிக்கெட்; விளையாடிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர் பலி!

இன்று லக்னோ மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான 45ஆவது போட்டி நடக்க இருக்கிறது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து, 

மே 07 - குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - அகமதாபாத்
மே 13 - சன்ரைசர்ச் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்ட் - ஹைதராபாத்
மே 16 - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ச் - மும்பை இந்தியன்ஸ் - லக்னோ
மே 20 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - கொல்கத்தா

ஆகிய அணிகளுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. தற்போது வரையில் 9 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்துள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும். 

தோனி யாரையும் விமர்சித்தது இல்லை; சீனியர்களுக்கு மதிப்பு கொடுப்பவர்: கோலி மாதிரி கிடையாது!

வரும் ஜூன் 7 ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடக்கிறது. இதற்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களின் ஜெயதேவ் உனத்கட்டும் ஒருவர். தற்போது அவருக்கு தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய அணிக்கு திரும்புவது சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும், இன்னும் ஒரு மாத காலம் இருக்கும் நிலையில், அதற்குள்ளாக அவர் குணமடைந்து அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios