WTC Final: அடுத்தடுத்து காயமடைந்த பந்து வீச்சாளர்கள்; சிக்கலில் இந்திய அணி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரும் ஜூன் மாதம் நடக்க உள்ள நிலையில், உமேஷ் யாதவ் மற்றும் ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் அடுத்தடுத்து காயமடைந்துள்ளனர்.
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் உமேஷ் யாதவ்வும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் ஜெயதேவ் உனத்கட்டும் இடம் பெற்று விளையாடி வருகின்றனர். இந்த இருவரும் வரும் ஜூன் 7 ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.
எமனாக வந்த கிரிக்கெட்; விளையாடிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர் பலி!
இந்த நிலையில், தான் உமேஷ் யாதவ் மற்றும் ஜெயதேவ் உனத்கட் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக நடந்த கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது காயம் ஏற்பட்ட நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடவில்லை. உமேஷ் யாதவ்விற்கு தொடையின் தசைப் பகுதியில் வலி ஏற்பட்ட நிலையில், அவர் கடந்த போட்டியில் விளையாடவில்லை. அடுத்து வரும் போட்டியில் அவர் விளையாடுவாரா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தோனி யாரையும் விமர்சித்தது இல்லை; சீனியர்களுக்கு மதிப்பு கொடுப்பவர்: கோலி மாதிரி கிடையாது!
இதே போன்று வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட் நெட் பயிற்சியின் போது கீழே விழுந்ததால் இடது தோள்படை பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில், அவர் நேற்றைய போட்டியில் இடம் பெறவில்லை. எனினும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்று தெரிகிறது. எனினும், இறுதிப் போட்டிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நேற்றைய போட்டியின் போது ஆர்சிபிக்கு எதிராக லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பீல்டிங் செய்த போது வலது காலின் தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது.
ஆர்சிபி தான் தனக்கு பிடித்தமான அணி - ராஷ்மிகா மந்தனா!
இதையடுத்து அவர் உடனடியாக வெளியேறினார். அவருக்குப் பதிலாக குர்ணல் பாண்டியா கேப்டனாக செயல்பட்டார். எனினு, இறுதியாக கேஎல் ராகுல் களமிறங்கினார். இதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் ஒவ்வொருவராக காயமடைந்து வருவது இந்திய அணிக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.