எமனாக வந்த கிரிக்கெட்; விளையாடிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர் பலி!
சென்னையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்த இளைஞர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உணவு பழக்க வழக்கம் காரணமாக இன்றைய காலகட்டத்தில் மாரடைப்பு அதிகளவில் ஏற்பட்டு பலரும் உயிரிழந்து வருகின்றனர். அதிலும் இளைஞர்கள் மத்தியில் அதிகளவில் ஏற்படுகிறது. அப்படியொரு சம்பவம் தான் விளையாடிக் கொண்டிருந்த இளைஞருக்கு நேர்ந்துள்ளது. சென்னை அடுத்துள்ள மாதவரம் அம்பேத்கர் நகர் ஜிஎன்டி சாலையிலுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஸ்ரீ ராம் (30). இவர், அந்தப் பகுதியிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இன்னும் திருமணம் ஆகவில்லை.
தோனி யாரையும் விமர்சித்தது இல்லை; சீனியர்களுக்கு மதிப்பு கொடுப்பவர்: கோலி மாதிரி கிடையாது!
இவர் அவ்வப்போது நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அப்படி தான் நேற்று முன் தினமும் மாலையில் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாட சென்றுள்ளார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து நண்பர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆர்சிபி தான் தனக்கு பிடித்தமான அணி - ராஷ்மிகா மந்தனா!
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். திடீரென்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.