தோனி யாரையும் விமர்சித்தது இல்லை; சீனியர்களுக்கு மதிப்பு கொடுப்பவர்: கோலி மாதிரி கிடையாது!

விராட் கோலி மற்றும் கவுதம் காம்பீர் தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில் எப்போதும் எல்லோருக்குமே மதிப்பு கொடுக்க கூடியவர் தோனி என்று ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

MS Dhoni Never replied to his critics and never criticised any player he is not Virat Kohli

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 43ஆவது போட்டி  லக்னோவில் நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் பாப் டூப்ளெசிஸ் 44 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 31 ரன்கள் சேர்த்தார். தினேஷ் கார்த்திக் 16 ரன்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் ஒற்றைப்படையில் ஆட்டமிழந்தனர்.

ஆர்சிபி தான் தனக்கு பிடித்தமான அணி - ராஷ்மிகா மந்தனா!

பின்னர் எளிய இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு பந்து வீச்சாளர் கிருஷ்ணப்பா கௌதம் அதிகபட்சமாக 23 ரன்கள் சேர்த்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதே போன்று அமித் மிஷ்ராவும் தன் பங்கிற்கு 19 ரன்கள் குவித்தார். நவீன் உல் ஹாக் 13 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே, கடைசி வரை போராடிய லக்னோ 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

முதல் முறையாக ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்று வரலாற்று சாதனை படைத்த நேபாள்!

போட்டி முடிந்த பிறகு தான் சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்துள்ளது. லக்னோ அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது விராட் கோலி ஷு காலை தூக்கி காட்டி தன்னை அவமானப்படுத்தும் விதமாக நடந்து கொண்டார் என்று லக்னோ வீரர் நவீன் உல் ஹாக் நடுவரிடம் குற்றம் சாட்டினார். இதனால், நடுவர், விராட் கோலியை அழைத்து அறிவுறுத்தினார். இதன் காரணமாக விராட் கோலி ஆத்திரமடைந்தார். 

அதுமட்டுமின்றி விராட் கோலி ஒவ்வொரு கேட்சாக பிடிக்கும் போது கூட மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார். அப்போது, கவுதம் காம்பீருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விராட் கோலி சைகை மூலமாக செய்து காட்டினார். அதோடு, போட்டி முடிந்த பிறகும் கூட விராட் கோலி, லக்னோ வீரர் கைல் மேயர்ஸ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை பார்த்துக் கொண்டிருந்த காம்பீர், மேயர்ஸை பிரச்சனை ஏதும் வேண்டாம் என்று கூறி அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றார்.

விராட் கோலி காலில் விழுந்து வணங்கிய ரசிகர்: அவரை தூக்கி கட்டியணைத்த கிங்!

இதையடுத்து, விராட் கோலியின் கவனம் முழுவதும் காம்பீர் பக்கமாக திரும்பியது. ஏற்கனவே தன்னை விமர்சனம் செய்ததால் கோபத்தில் இருந்த காம்பீர், கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது மற்ற வீரர்கள் அனைவரும் சூழ்ந்து மோதலை தடுக்க முற்பட்டனர். ஆனால், அதில் எந்த பலனும் இல்லாத நிலையில், அமித் மிஷ்ரா மற்றும் விஜய் தாஹியா ஆகியோர் விராட் கோலியை விலகிச் செல்லுமாறு அறிவுறுத்தினர். இந்த சம்பவம் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விராட் கோலிக்கு முழு சம்பளம் ரூ.1.07 கோடி, கவுதம் காம்பீருக்கு முழு சம்பளம் ரூ.25 லட்சம் அபராதம்!

இந்த நிலையில், தான் விராட் கோலி, கவுதம் காம்பீர் மற்றும் நவீன் உல் ஹாக் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, விராட் கோலியின் முழு சம்பளமும் ரூ.1.07 கோடியும், கவுதம் காம்பீரின் முழு சம்பளம் ரூ.25 லட்சம் மற்றும் நவீன் உல் ஹாக்கிற்கு போட்டியின் பாதி சம்பளம் ரூ.1.79 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ரன்னாக ஓடி ஓடி எடுத்த ஆர்சிபி: ஆறுதல் கொடுத்த பாப் டூப்ளெசிஸ்: மொத்தமே 2 சிக்ஸர், 6 பவுண்டரி தான்!

இதனை குறிப்பிட்டு டுவிட்டரில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த ஐபிஎல் சீசனில் தோனிக்கு எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை. அவர் மற்ற இளம் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் தான் இருந்துள்ளார். இதனால் தான் ரசிகர்கள் தோனி கொண்டாடி வருகின்றனர். அதோடு, எப்போதும் சீனியர் வீரர்களுக்கு மதிப்பளிக்கக் கூடியவர். அவர் முன்னாள் வீரர்கள் மீது மதிப்பும், மரியாதையும் கொண்டவர். இதுவரையில் யாரிடமும், எதற்காகவும் சண்டை போட்டதும் கிடையாது. விராட் கோலி மாதிரியெல்லாம் தோனி கிடையாது என்று ரசிகர்கள் தோனி கொண்டாடி வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios