விட்டு விட்டு மழை: போட்டி நிறுத்தம்; சென்னை பேட்டிங் ஆடுமா?

சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது மழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையில், போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.

Rain Stops Lucknow Super Giants Playing Match against Chennai Super Kings at Ekana Cricket Stadium

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சு தீர்மானித்தது. அதன்படி, கேஎல் ராகுல் இல்லாத நிலையில், அவருக்குப் பதிலாக மனன் வோஹ்ரா களமிறங்கினார். முதலில் தீபக் சகார் மற்றும் துஷார் தேஷ்பாண்டே இருவரும் முதல் 3 ஓவர்களை வீசினர். ஆனால், அதில் விக்கெட் விழாத நிலையில் பவுண்டரி தான் அதிகம் அடிக்கபட்டது. இதையடுத்து ஸ்பின்னர்களை தோனி அழைத்தார்.

முதலில் மொயீன் அலி பந்து வீசினார். அவரது 3.4ஆவது ஓவரில் கைல் மேயர்ஸ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து மகீஷ் தீக்‌ஷனா வரவழைக்கப்பட்டார். அவர் வீசிய 5.4ஆவது ஓவரில் தொடக்க வீரர் மனன் வோஹ்ரா கிளீன் போல்டானார். இவர் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து லக்னோ அணியின் கேப்டன் குர்ணல் பாண்டியா களமிறங்கினார். இவர், வந்த வேகத்தில் கோல்டன் டக் முறையில் தீக்‌ஷனா பந்தில் ஸ்லிப்பில் நின்றிருந்த அஜிங்கியா ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், அவர் ஆட்டமிழந்ததற்கு அவர் கொடுத்த ரியாக்‌ஷன் ரசிகர்களை வியக்க வைத்தது. அடுத்து நிக்கோலஸ் பூரன் மற்றும் ஆயுஷ் பதோனி இருவரும் இணைந்து ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் நிக்கோலஸ் பூரன் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து தனது அதிரடியை காட்டிய பதோனி 4 சிக்ஸர்கள் அடித்து தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். தற்போது 19.2 ஓவர்களில் லக்னோ அணி 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கீடு இருந்தது. கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதையடுத்து மீண்டும் போட்டி தொடங்க இருந்த நிலையில், மீண்டும் மழை பெய்து வருகிறது.

தார்ப்பாய் நீக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் மைதானத்திற்குள் தார்ப்பாய் கொண்டு வரும் ஊழியர்களுடன் இணைந்து லக்னோ அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஜான்டி ரோட்ஸ் தார்ப்பாய் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டார். 


 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios