ஒரு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பூஜ்ஜியம்: பாக், முன்னாள் வீரர் பாசித் அலி!
ஒரு பயிற்சியாளராக இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஜீரோ என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி விமர்சனம் செய்துள்ளார்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்தது. இந்தியா முத லின்னிங்ஸில் 296 ரன்கள் மட்டுமே எடுத்து 173 ரன்கள் பின் தங்கியிருந்தது.
இதையடுத்து 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா 3ஆவது நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்திருந்தது. தற்போது 4ஆவது நாளில் விளையாடி வருகிறது. இந்த நிலையில், இந்தியா டாஸ் ஜெயிச்சு பவுலிங் தேர்வு செய்த போதே தோல்வி அடைந்துவிட்டது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பாசித் அலி விமர்சனம் செய்துள்ளார்.
பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை 2023 ஹாக்கி: ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா!
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஒரு பயிற்சியாளராக இந்திய அணியின் ராகுல் டிராவிட் முற்றிலும் ஜீரோ. நான், எப்போதும் ராகுல் டிராவிட்டின் தீவிர ரசிகன். அவர் ஒரு ஜாம்பவான். ஒரு கிளாஸ் பிளேயர். ஆனால் ஒரு பயிற்சியாளராக, அவர் முற்றிலும் பூஜ்ஜியமாக இருக்கிறார். பேட்டிங்கிற்கு சாதகமாக இப்படியொரு மைதானத்தில் எப்போது இந்திய அணி பவுலிங் தேர்வு செய்ததோ அப்போதே இந்தியா தோல்வி அடைந்துவிட்டது.
மைதானத்திலேயே அந்தர் பல்டி அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்: வைரலாகும் வீடியோ!
உண்மையில், ராகுல் டிராவிட் என்ன நினைத்து இப்படியொரு முடிவு எடுத்தாரோ, அது கடவுளுக்கு தான் தெரியும். இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழலில் இந்தியா வெற்றி பெற்றால் அது ஆச்சரியமான ஒரு விஷயமாக இருக்கும் என்று கூறியுள்ளார். அலி, 19 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 50 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
Ind vs Aus, WTC Final Day 4: மழை பெய்ய வாய்ப்பு: போட்டி பாதிக்கப்படுமா?