விரல் வீங்கியிருந்தாலும் தன்னலமற்று விளையாடிய உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் – ரஹானே மனைவி உருக்கம்!

விரல் வீங்கியிருந்தாலும் தன்னலமற்ற தன்மையையையும், உறுதியையும் வெளிப்படுத்தி பேட்டிங் ஆடிய உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என்று அஜிங்கிய ரஹானேயின் மனைவி ராதிகா தோபவ்கர் கூறியுள்ளார்.

I am proud of you for playing so selflessly even with a swollen finger said Ajinkya Rahane Wife Radhika Dhopavkar in her insta page

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடி வருகின்றன. இதில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும், வார்னர் 43 ரன்களும், அலெக்ஸ் கேரி 48 ரன்களும் எடுத்தனர்.

பிஷன் சிங் பேடியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா சாதனை!

இதையடுத்து ஆடிய இந்திய அணிக்கு தொடர்ந்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தான் காத்திருந்தது. ரோகித் சர்மா 15 ரன்னிலும், சுப்மன் கில் 13 ரன்னிலும், சட்டேஷ்வர் புஜாரா 14 ரன்னிலும், விராட் கோலி 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அஜிங்கியா ரஹானே மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் நின்னு நிதானமாக ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் ஜடேஜாவும் 48 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் களமிறங்கினார்.

பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை 2023 ஹாக்கி: ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா!

ஒருபுறம் பவுண்டரியாக அடித்த ரஹானே விரல், தலையிலும் அடிபட்டு இந்திய அணிக்காக ரன்கள் சேர்த்தார். விரலில் காயம் ஏற்பட்ட நிலையில், அதற்காக பேண்டேஜூம் போடப்பட்டது. காயத்துடன் விளையாடிய ரஹானே 89 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த நிலையில், ரஹானே இந்த செயல் குறித்து அவரது மனைவி ராதிகா தோபவ்கர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஹானேயின் புகைப்படங்களை பகிர்ந்து அவரை பாராட்டியுள்ளார்.

மைதானத்திலேயே அந்தர் பல்டி அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்: வைரலாகும் வீடியோ!

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: உங்கள் விரல் வீங்கியிருந்தாலும், உங்கள் மனநிலையைப் பாதுகாக்க ஸ்கேன் செய்ய மறுத்து, நம்பமுடியாத தன்னலமற்ற தன்மையையும் உறுதியையும் வெளிப்படுத்தி, பேட்டிங்கில் கவனம் செலுத்தினீர்கள். அசைக்க முடியாத நெகிழ்ச்சி மற்றும் அர்ப்பணிப்புடன், நீங்கள் கிரீஸில் உங்கள் இடத்தைப் பிடித்தீர்கள், எங்கள் அனைவருக்கும் உத்வேகம் அளித்தீர்கள். உங்கள் அசைக்க முடியாத இந்த உணர்வை நினைத்து நான் என்றென்றும் பெருமைப்படுகிறேன். முடிவு இல்லாமல் நேசிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Ind vs Aus, WTC Final Day 4: மழை பெய்ய வாய்ப்பு: போட்டி பாதிக்கப்படுமா?

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios