Ind vs Aus, WTC Final Day 4: மழை பெய்ய வாய்ப்பு: போட்டி பாதிக்கப்படுமா?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் இறுதிப் போட்டியின் 4ஆவது நாளின் போது மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Rain may interrupts today IND vs AUS WTC Final Match at Oval

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. இதில், டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 121 ரன்களும், அலெக்ஸ் கேரி 48 ரன்களும் எடுக்க ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் எடுத்தது.

மைதானத்திலேயே அந்தர் பல்டி அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்: வைரலாகும் வீடியோ!

பின்னர் ஆடிய இந்திய அணியில் அஜிங்கியா ரஹானே 89 ரன்களும், ஷர்துல் தாக்கூர் 51 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 48 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக இந்தியா முதல் இன்னிங்ஸில் 296 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. இதில், டேவிட் வார்னர் ஒரு ரன்னிலும், உஸ்மான் கவாஜா 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

சுப்மன் கில்லை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட ரசிகை: ஓவலில் வைரலாகும் புகைப்படம்!

அதன் பிறகு வந்த ஸ்டீவ் ஸ்மித் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்துக் கொண்டிருந்தார். ஆனால், அவர் ஜடேஜா ஓவரில் அடிக்க முற்பட்டு ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில் 121 ரன்கள் எடுத்த ஸ்மித், 2ஆவது இன்னிங்ஸில் 34 ரன்களில் வெளியேறினார்.

இதே போன்று டிராவிஸ் ஹெட்டும் முதல் இன்னிங்ஸில் 163 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 2அவது இன்னிங்ஸில் 18 ரன்களில் வெளியேறினார். இறுதியாக 3ஆவது நாளில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 4ஆவது நாள் போட்டி நடக்க இருக்கிறது. ஆனால், இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

வார்னர் அவுட் ஆனது கூட தெரியாமல் தூங்கிய மார்னஷ் லபுஷேன்!

வானிலையும் அதற்கேற்ப தான் இருப்பதாக கூறப்படுகிறது. முதல் நாள் போட்டியின் போதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால், அதன் பிறகு வெயிலின் தாக்கம் இருந்தது. இன்றும் அதே போன்று ஒரு வானிலை தான் நிலவுவதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios