முகமது சிராஜ் ஓவரில் டேவிட் வார்னர் ஆட்டமிழந்தது கூட தெரியாமல் ஆஸி, வீரர் மாரனஷ் லபுஷேன் தூங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 469 ரன்கள் குவித்தது. இதில், டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 121 ரன்களும், அலெக்ஸ் கேரி 48 ரன்களும் எடுத்தனர்.
திருப்பூரில் புதிய வலை பயிற்சி அரங்கத்தை திறந்து வைத்த தமிழக வீரர் நடராஜன்!
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா 15, சுப்மன் கில் 13, சட்டேஷ்வர் புஜாரா 14, விராட் கோலி 14 ரன்கள் என்று நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன் பிறகு வந்த ரவீந்திர ஜடேஜா ஓரளவு நம்பிக்கை கொடுத்தார். அவர் 48 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவுட்டுன்னு நடையை கட்டிய ஆஸி வீரர்கள், சிராஜ் கேட்ட ரெவியூவால் திரும்ப வந்து பந்து வீசிய க்ரீன்!
பின்னர் பரத் 5 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து அஜிங்கியா ரஹானே மற்றும் ஷர்துல் தாக்கூர் இருவரும் இணைந்து நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் இந்தியா பாலோ ஆன் தவிர்க்குமா என்று எதிர்பார்த்த நிலையில், இருவரும் இணைந்து அரைசதம் அடித்து பாலோ ஆன் தவிர்க்க உதவினர்.
ஒரு கட்டத்தில் ரஹானே அரைசதம் அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 5020 ரன்கள் எடுத்தார். அவர் 89 ரன்களில் ஆட்டமிழந்தார். இதே போன்று, ஷர்துல் தாக்கூரும் அரைசதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த உமேஷ் யாதவ் 5 ரன்னிலும், முகமது ஷமி 13 ரன்னிலும் ஆட்டமிழக்க இறுதியாக இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 296 ரன்கள் குவித்து 173 ரன்கள் பின் தங்கியுள்ளது.
இதையடுத்து, ஆஸ்திரேலியா தனது 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா இருவரும் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கினர். இதில், முகமது சிராஜ் வீசிய 3.3 ஆவது ஓவரில் டேவிட் வார்னர் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தது கூட தெரியாமல் 3ஆவதாக களமிறங்க வேண்டிய மார்னஷ் லபுஷேன் தூங்கியுள்ளார். சிறிது நேரம் கழித்து எழுந்து உடனடியாக மைதானத்திற்குள் வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
