மைதானத்திலேயே அந்தர் பல்டி அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்: வைரலாகும் வீடியோ!
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெவின் சின்க்ளேர் 4 விக்கெட்டுகள் கைப்பற்றிய நிலையில் அந்தர் பல்டி அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் முதல் ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே போன்று 2ஆவது ஒரு நாள் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்று வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.
ஸ்மித்திற்காக ரசிகர்களை கையெடுத்து கும்பிட்ட நடுவர் ஒரு பக்கம்; நடுவரை இடித்த முகமது ஷமி ஒரு பக்கம்!
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய ஐக்கிய அரபு எமீரேட்ஸ் அணி 36.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 184 ரன்கள் எடுத்தது.
சுப்மன் கில்லை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட ரசிகை: ஓவலில் வைரலாகும் புகைப்படம்!
அதிகபட்சமாக ஐக்கிய அரபுகள் அணியின் விக்கெட் கீப்பர் அரவிந்த் 70 ரன்கள் எடுத்தார். கேப்டன் முகமது வசீம் 40 ரன்கள் எடுத்தார். பந்து வீச்சு தரப்பில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெவின் சின்க்ளேர் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இந்தப் போட்டியில் ஒவ்வொரு விக்கெட்டை எடுக்கும் போது கெவின் சின்க்ளேர் அந்தர் பல்டி அடித்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.
இந்தியா ஸ்கோரை எடுத்து ஆஸி., முன்னிலை: ஸ்மித், ஹெட் விக்கெட்டை தட்டி தூக்கிய ஜடேஜா!
பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 35.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் அலிக் அத்தானாஸ் அதிகபட்சமாக 65 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெவின் சின்க்ளேர் ஆட்டநாயகன் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
வார்னர் அவுட் ஆனது கூட தெரியாமல் தூங்கிய மார்னஷ் லபுஷேன்!