ஒரு கையில் துண்டிக்கப்பட்ட ஆட்டு தலை, ஒரு கையில் குழந்தையை பிடித்தபடி போஸ் கொடுத்த ஷாகீத் அப்ரிதி!
ஒரு கையில் தனது மகளையும், மற்றொரு கையில் துண்டிக்கப்பட்ட ஆட்டு தலையையும் பிடித்தபடி பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிதியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாட்டப்பட்டது. இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையில் பக்ரீத் பண்டிகையும் ஒன்று. இது ஹஜ் பெருமாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்ராஹீமின் தியாகத்தை பறைசாற்றும் வகையில் இந்த பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாட்டப்பட்டது.
மக்களுக்காக சேவை செய்யவே வருகிறேன் – அம்பத்தி ராயுடு!
இந்த நாளின் போது ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்கு பலியிட்டு இறைச்சியை நண்பர்கள், உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்வார்கள். இந்த நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஷாகீத் அப்ரிதி ரூ.4 கோடி மதிப்புள்ள காளையை விலைக்கு வாங்கியுள்ளார். காளையை பிடித்து நடந்து செல்லும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஸ்டிக் ஊன்றி நடக்கும் நாதன் லயான்; இன்று விளையாட வாய்ப்பில்லை; ஆஸிக்கு பின்னடைவு!
இந்த காளையை இறைவனுக்கு பலியிட்டு இறைச்சியை ஏழைகளுக்கு விநியோகம் செய்துள்ளார். இதே போன்று ஒரு கையில் தலை துண்டிக்கப்பட்ட ஆட்டின் தலையையும் கையில் பிடித்தபடியும், மற்றொரு கையில் மகளையும் பிடித்தபடி புகைப்படம் எடுத்துள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த புகைப்படத்தை வைத்து விமர்சிக்கவும் பட்டுள்ளார். ஓ, இது தான் அமைதிக்கான மற்றும் செழுமைக்கான பண்டிகையா? என்று விமர்சிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் பாகிஸ்தான் அணியில் இடம் பெற்று விளையாடியுள்ளார். இதுவரையில் 398 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 8064 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 124 ரன்கள் எடுத்தார். மேலும், பந்து வீச்சாளராக 395 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.