மக்களுக்காக சேவை செய்யவே வருகிறேன் – அம்பத்தி ராயுடு!

மக்களுக்கு சேவை செய்யவே அரசியலில் களமிறங்க உள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

Former CSK Player Ambati Rayudu Said that I am coming to serve the people

ஐபிஎல் 16ஆவது சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் அம்பத்தி ராயுடு ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்றார். அதோடு, சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ரூ.500 கோடி தரும் பிசிசிஐ; மாஸ் மைதானமாக மாறும் சென்னை சேப்பாக்கம்!

சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடர்களிலிருந்து ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடு, அடுத்து அமெரிக்காவில் நடக்கும் மேஜர் டி20 கிரிக்கெட் லீக்கில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். சமீபத்தில் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை, ஐபிஎல் டிராபியுடன் சென்று அம்பத்தி ராயுடு சந்தித்தார். இதையடுத்து, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று கூறப்பட்டது.

ஸ்டிக் ஊன்றி நடக்கும் நாதன் லயான்; இன்று விளையாட வாய்ப்பில்லை; ஆஸிக்கு பின்னடைவு!

இந்த நிலையில், ஆந்திரா மாநிலம் குண்டூரில் மக்களை சந்தித்து பேசினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆந்திரமாநில அரசியலில் களமிறங்குவேன். ஆனால், அதற்கு முன்னதாக மக்களின் பிரச்சனைகள் குறித்து அறிந்து கொண்டு அவர்களது பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வர சரியான திட்டத்தை உருவாக்க வேண்டும்.

ஆனால், எந்தக் கட்சியில் இணைகிறேன் என்பதை கூடிய விரைவில் அறிவிப்பேன். அம்பத்தி ராயுடு குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மச்சிலி பட்டணத்தில் போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் 2023: 8ஆவது முறையாக இந்தியா சாம்ப்யன் - 9 சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் இந்தியா 8 வின்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios